கதவினை மூடாமல் நடுவானில், பறந்த பயணிகள் விமானம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த பயணிகள் விமானத்தின் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததை பார்த்த விமானி அதிரடி நடவடிக்கை மூலம் பெரும் ஆபத்தை தவிர்த்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள செபு விமான நிலையத்திலிருந்து ஜின் ஏர் என்ற விமானம் 163 பயணிகளுடன் நேற்று புறப்பட்டுள்ளது.
தென் கொரியா நாட்டிற்கு சொந்தமான இந்த விமானம் அதே நாட்டில் உள்ள பூசன் நகருக்கு சென்றுக்கொண்டிருந்துள்ளது.
விமானம் புறப்பட்டு 40 நிமிடங்கள் ஆன பிறகு, பூமியிலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் மர்மமான முறையில் சத்தம் வந்ததை விமான குழுவினர் கேட்டுள்ளனர்.
உடனே சத்தம் வந்த திசையில் ஆய்வு செய்தபோது, விமானத்தின் நுழைவு கதவுகளில் ஒன்று சரியாக மூடப்படாமல் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியுள்ளனர்.
அதனை மேலும் அவர்களால் மூடவும் முடியவில்லை. உடனே இந்த சூழலை குழுவினர் விமானிகள் தெரிவித்தனர்.
விமானம் மேற்கொண்டு பறந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என தீர்மானித்த விமானி உடனே விமானத்தை திருப்பி புறப்பட்ட விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. செபு நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் விமான நிறுவனம் சார்பில் பயணிகள் அனைவருக்கும் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு விமானம் வரவழைக்கப்பட்டு அந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தென் கொரியா சென்றடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜின் ஏர் விமான நிறுவன அதிகாரிகள், பயணம் பாதிக்கப்பட்டதால் அதற்கு இழப்பீடாக ஒவ்வொரு பயணிக்கும் 84.28 டொலர் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
மேலும், தென் கொரியாவிற்கு சொந்தமான ஜின் ஏர் போன்ற குறைவான கட்டணங்களில் இயங்கும் 6 விமானங்களை உடனடியாக ஆய்வு செய்யவுள்ளதாக தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment