'சிங்ஹலே' யை கட்டுப்படுத்தாவிட்டால், 'மரக்கலே' உருவாகும் - சிசிர சி விதானகே
(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் இனப்பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்படும் 'சிங்ஹ லே' அமைப்பை தடைசெய்வதற்கு பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றிணைவு கோரிக்கை விடுத்தது.
இவர்களூடாக இனங்களுக்கிடையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றிணைவு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அதன் தலைவர் சிசிர சி விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இனங்களை அச்சுறுத்தும் வகையில் ஏற்படுத்தப்படும் பிரிவுகள் சமூகத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும். தற்போது நாட்டில் உருவாகியுள்ள ‘சிங்ஹலே’ என்ற அமைப்பு நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்படுகின்றது. அதன் இலச்சினைகள் இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பஸ்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.
ஆனால் இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். அத்துடன் அரசாங்கத்தின் மூலம் நாட்டிற்கு நன்மை கிடைப்பதை ஒருபோதும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.
அவ்வாறு நடந்தால் அதன் பிறகு அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு முடியாமல் போகும் என்ற அச்சம் இருக்கிறது.
அன்றிருந்த ஆட்சியாளர்கள் 1956 இல் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியை தேடிப்பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால் 30 வருட யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்காது.
அதேபோன்றே தற்போது இனப்பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்படும் ‘சிங்ஹலே’ என்ற அமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இதற்கு எதிராக ‘கொட்டிலே’, ‘மரக்கலே’ என்ற பெயர்களிலும் அமைப்புகள் உருவாகுவதை தடுக்க முடியாமல் போய்விடும்.
மேலும் இந்த ‘சிங்ஹலே’ அமைப்பின் பின்னணியில் பொது பலசேனா, சிங்கள ராவய மற்றும் நீலப்படையணி ஆகிய அமைப்புகள் இருக்கின்றமை உறுதியாகியுள்ளது.
அத்துடன் இது போன்ற அமைப்புகளில் கூடுதலாக மாணவர்களையே இணைத்துக் கொள்வார்கள். ஏன் என்றால் தற்போதுள்ள மாணவர்களுக்கு யுத்தத்தின் தாற்பரியம் தெரியாது. அதனால் இதனைக் கொண்டு செல்வதற்கு மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
எனவே நாட்டில் இனப்பிரச்சினையை தூண்டும் வகையில் உருவாகும் அமைப்புகள் மற்றும் இலச்சினைகளை தடைசெய்வதற்கும் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதில் எந்த பயனும் இல்லாமல் போகும் என்றார்.
Ulagil engirunthalum Muslimgalukku nimmazi illai enra oru nilai
ReplyDeleteuruvagivitta pinnaniyil irunthuthaan izanayum noakka vendivarum.
Nichchayamaaga ivargal thanippattu seyatpadavillai. Ivargalukku
appadiyoru thairiyamum kidayaazu. Muslimkal oru suya
vimarshanaththai muzalil metkondaal , udanadiththeervaga illa
vittalum ezirkaalachikkalgalukku mugam kodukka ilaguvaaga
irukkum . Muslimgalukko allazu arasiyal laafam karuthiyo intha arasu ezuvum seyya mudiyaazapadi ore kallil irandu enru
aarambiththirukkiraargal. Intha business oyap povazillai enru
ninaiththu seyatpada vendivarum.