"கிழக்கு மாகாண ஆட்டோ சாரதிகளுக்கு, அநீதியிழைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது" - அப்துர் ரஹ்மான்
"எந்தவொரு அரச நிர்வாக கட்டமைப்பும் பொது மக்களிடமிருந்து வரிகளை அறவிடும் போது அதற்கு பகரமாக பெறுமதியான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். அந்த வகையில் மேலதிக எந்த சேவைகளையும் வழங்காமலும், வேறு எந்த நியாயங்களுமின்றியும் கிழக்கு மாகாண ஆட்டோ சாரதிகளிடமிருந்து மேலதிக வரியினை அறவிடுவதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மானித்திருப்பதானது எற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதனை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகளோடு நடாத்தப்பட்ட விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காத்தான்குடியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் அலுவலகத்தில் நேற்று(17.01.2016 )நடைபெற்ற இந்த சந்திப்பில் NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மானோடு அதன் காத்தான்குடி பிராந்திய சபையின் உறுப்பினரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான AGM ஹாரூன் அவர்களும் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண முச்சக்கர வண்டி ஓட்டுனர்களிடமிருந்து மேலதிக வருடாந்த பதிவுக் கட்டணமாக 800 ரூபாவினை இவ்வருடமுதல் அறவிடுவதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மானித்திருந்தது.
இது தொடர்பான அறிவித்தல்கள் கிழக்கு மாகாண சபையினால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன.
2015 டிசம்பா 31 க்கு முன்னதாக முச்சக்கர வண்டி சாரதிகள் இக்கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தொடச்சியாக வலியுறுத்தி வந்தது.
ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு தாம் வருடாந்தம் வரி செலுத்தி உத்தியோகபூர்வ அனுமதியினைப் பெற்று வருகின்ற போதிலும் அதற்குரிய முறையான சேவைகளை உள்ளூராட்சி மன்றங்கள் இது வரை திருப்திகரமாக செய்யாத நிலையில் கிழக்கு மாகாண சபை இவ்வாறு மேலதிக வரியை தம்மீது திணிப்பது பெரும் அநியாயம் என காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்தோடு 800 ரூபாவிலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வரி எதிர் வரும் காலங்களில் இன்னும் பல மடங்குகளாக அதிகரிக்கப்படும் என தாம் அஞ்சுவதாகவும், தாம் ஏற்கனவே பல பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியில் இத்தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் தம்மால் சுமக்க முடியாத சுமையாக இவ்வரிச்சுமைகள் அமைகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். அத்தோடு இலங்கையில் இயங்குகின்ற மாகாண சபைகளில் வேறு எந்த சபைகளினாலும் இவ்வாறான மேலதிக வரி முச்சக்கர வண்டி சாரிரதிகள் மீது திணிக்கப்பட வில்லையெனவும் கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே இந்த வரி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள் இது தம்மீது இழைக்கப்படும் பாரிய அநியாயமாகும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தாம் எதிர்நோக்கும் நாளாந்தப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்தப் புதிய வரி அறவீட்டினை மீள் பரிசீலிக்குமாறு கிழக்கு மாகாண சபை உயர் அதிகாரம் கொண்டோர் தொடக்கம் சகல மட்டத்தினருடமும் முச்சக்கரவண்டி சாரதிகள் கடந்த ஆண்டு முதல் பல்வேறு மனுக்களை சமர்ப்பித்து வந்தனர். அவை எவற்றுக்கும் பதிலளிக்காது டிசம்பா 31 ஆம் திகதிக்கு முன்பாக குறித்த மேலதிக வரிகளை செலுத்தியேயாக வேண்டும் என கிழக்கு மாகாண சபையினால் கொடுக்கப்படும் அழுத்தம் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து நியாயம் கேட்குமுகமாக ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை கடந்த டிசம்பர் 28ஆம் திகதி காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கம் நடாத்தியது. இதன்போது ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்ளடங்கலாக கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபை பிரதிநிதகள், மாவட்ட பாராளுமன்னறப் பிரதிநிதிகள் என சகலருக்கும் தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறி கோரி தமது மனுக்களை அவர கள் கையளித்திருந்தனர். ஊடகங்களிலும் இந்த விடயம் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து ஆட்டோ சாரதிகளின் கோரிக்கையின் நியாயத் தன்மையினைப் புரிந்து கொண்ட NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், காத்தான்குடி ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு உரையாடியதோடு தம்மாலான முழு ஒத்துழைப்பையும் இவ்விடயத்தில் வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு நேற்து நடை பெற்றது. அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது.
"கிழக்கு மாகாணத்தைச் சேந்த 3 மாவட்டங்களலும் மொத்தமாக 26000த்திற்கும் அதிகமானோர் ஆட்டோ ஓட்டுனர்களாக தொழில் செய்கின்றனர். அதனடிப்படையில் பார்க்கும் போது இந்த மேலதிக வரி அறவீட்டின் மூலமாக கிழக்கு மாகாண சபை நிர்வாகம் இரண்டு கோடி ரூபாய் வரையான தொகையினை மேலதிக வருமானமாக பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது.
எந்த வொரு அரச நிர்வாக கட்டமைப்பும் பொது மக்களிடமிருந்து வரியினை அறவிடும்போது அது ஏன் அறவிடப்படுகிறது, அதற்குப் பகரமாக மக்களுக்கு கிடைக்கும் சேவைகளும் நன்மைகளும் என்ன என்ற விடயங்களைத் தெளிவு படுத்தியாக வேண்டும். அந்த வகையில் இந்த மேலதிக வரி அறவீட்டின் மூலமாக பெருந்தொகை மேலதிக வருமானம் என்கின்ற பாரிய பிரயோசனத்தை அடைந்து கொள்ள முயற்சிக்கின்ற கிழக்கு மாகாண சபை , இது ஏன் அறவிடப்படுகிறது அதன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எவை என்ற ஏற்றுக் கொள்ளும் படியான எந்த விளக்கங்களையும் தரவில்லை.
உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளால் வருடாந்தம் செலுத்தப்படுகின்ற வரிகளுக்கான முழுமையான சேவைகள் கூட இதுவரை ஆட்டோ சாரதிகளுக்கு கிடைக்காத நிலையில் கிழக்கு மாகாண சபை மாத்திரம் இவ்வாறான ஒரு மேலதிக வரியினை திணிப்பதானது பெரும் அநியாயமாகும் இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

Post a Comment