கொழும்பு ரோயல் கல்லூரியில் திடீர் சோதனை, அதிபருக்கும் இடமாற்றம்..?
கொழும்பு ரோயல் கல்லூரியில் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பின் பிரபல பாடசாலையான ரோயல் கல்லூரியில் ஆரம்ப வகுப்புப் பிரிவில்கல்வி கற்பதற்கு, கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற வகுப்புகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக வகுப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த வகுப்பின் மூலம் உரிய தகைமை பெற்ற மாணவர்கள் பலர் பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக பெருந்தொகைப் பணமும் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இன்று (11) காலை கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் ரோயல் கல்லூரியில் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே கல்லூரியின் அதிபர் இன்று அல்லது நாளை கல்வி அமைச்சின் காத்திருப்போர் பட்டியலுக்கு உள்வாங்கப்பட்டு, அமைச்சு அலுவலகத்துக்கு இடமாற்றப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment