ஆறுதல் கூறச்சென்ற கனடா பிரதமருக்கு, காத்திருந்த அதிர்ச்சி..!
தீவிரவாதிகளின் தாக்குதலால் குடும்பத்தை இழந்து தவித்த தந்தை ஒருவருக்கு தொலைபேசி மூலம் கனேடிய பிரதமர் ஆறுதல் கூறியபோது அதனை ஏற்காமல் பாதிக்கப்பட்டவர் தொலைபேசி இணைப்பை துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா ஃபசோவின் தலைநகரான Ouagadougou நகரில் அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் கனடாவில் உள்ள கியூபெக் நகரை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்த 6 பேரில் நால்வர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புர்கினா ஃபசோவில் சமூக நல்லிணக்கப்பணிக்காக இந்த 6 பேரும் ஈடுப்பட்டபோது, தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியாயினர்.
பலியான குடும்பத்தின் தலைவரான Yves Richard என்பவரை கடந்த திங்கள் கிழமை கனேடிய பிரதமரான ஜஸ்டின் ரூடோ தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூற முயன்றுள்ளார்.
இது குறித்து ரிச்சார்ட் கூறுகையில், ‘பிரதமர் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டவுடன், ஏற்கனவே எழுதி வைத்திருந்ததை படிப்பது போல் சாதாரணமாக பேசினார்.
குடும்பத்தை இழந்த தனக்கு ஆறுதல் கூறுவதாகவும், கனடா நாட்டிற்காக தனது குடும்பம் உயிர் தியாகம் செய்திருப்பது நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை’ என ஒரு அரசியல்வாதி பேசுவது போல் பேசினார்.
பிரதமரின் இந்த ஆறுதல் வார்த்தைகளை ஏற்காததால் உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டதாக கூறினார்.
எனது குடும்பத்தினர் எந்த பணிக்காக அந்நாட்டிற்கு சென்றனர் என்பதை பிரதமர் முன்னதாகவே அறிந்திருக்க வேண்டும். கனடா நாட்டிற்காக மட்டுமே அவர்கள் உயிரை இழக்க வில்லை.
அடிப்படையிலேயே எனது குடும்பத்தினர் மிகவும் நல்லவர்கள்’ என பேசியுள்ளார்.
மேலும், ‘இணைப்பை துண்டிப்பதற்கு முன்னதாக, ‘எனக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுங்கள்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததாக வானெலி நிலையம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரிச்சார்ட் கூறியுள்ளார்.
Post a Comment