வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் Mp பதவியை, எமது கட்சிக்கு வழங்கவேண்டும் - சத்துர சேனாரத்ன
காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன காலமானதை அடுத்து வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக தேசிய அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை குணவர்தனவுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் குணவர்தன மரணமடைந்துள்ள நிலையில், ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமது கட்சியை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் சத்துர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவிஸர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சத்துர சேனாரத்ன அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

போனஸ் சண்டை இங்கும் ஆரம்பிச்சிட்டா ?
ReplyDeleteதகப்பனார் அமைச்சர் என்ற தைரியம்
Delete