சட்டத்தரணியாக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் - சாதனை மாணவி றிஸ்வீனா பேகம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் கலைப்பிரிவில் முசலி தேசிய பாடசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.
இதனடிப்படையில் பாடசாலையின் றிஸ்வீனா பேகம் என்ற மாணவி கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தையும் ,தேசிய மட்டத்தில் 43 ஆவது இடத்தையும் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவி சட்டத்தரணியாக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே தனது எதிர்கால கனவு என தெரிவித்துள்ளார்.
இவர் முசலி மணற்குளத்தைச் சேர்ந்த அலியார் மற்றும் நர்ஹீஸ் ஆகிய தம்பதிகளின் புதல்வியாவர்.
அத்துடன் தனது தந்தை விவசாயத்தில் ஈடுபட்டு தங்களின் கல்விக்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர், இந்த நேரத்தில் எனது பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அத்தோடு எனது கற்றல் நடவடிக்கைக்காக பல்வேறு வகையிலும் உதவிகளை புரிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு பின்தங்கிய கிராமமாக உள்ள முசலி கிராமத்தை எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்ல எனது பங்களிப்பு நிச்சையம் கிடைக்கும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
எனவும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடத்தை பெற்ற முசலி தேசிய பாடசாலை மாணவி றிஸ்வீனா பேகம் தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் சகோதரி அல்லாஹ் உங்கள் குடும்பத்துக்கும் உங்கலுக்கும் வழங்கிய அருட்கொடையே இது உங்கள் எஞ்சிய என்னங்கலும் நிரைவேர பிராத்திக்கின்ரோம் ஆமீன்.........
ReplyDeleteBest wishes
ReplyDelete