Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக, கடும் கண்டனங்கள்..!

 புலிகளின் முன்னாள் உறுப்பினர் சிவராஜா ஜெனிபனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக சில சிங்கள கடும் போக்குவாதிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவர்களில் பலர் முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படத்தை தமது வலைத்தள கணக்குகளில் பதிவேற்றியுள்ளனர்.

ஜெனிபனை, ஜனாதிபதி விடுதலை செய்தமை குறித்து கெலும் பிரியங்கர என்ற ஒருவர், தாய் நாட்டுக்காக போரிட்ட படையினர் சிறையில், ஈழத்திற்காக போரிட்ட புலிகளுக்கு விடுதலை. இதுதான் ஒரு வருடத்தின் மாற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனை சிறையில் அடைத்திருந்தால், அவரையும் கட்டாயம் விடுதலை செய்திருப்பார்கள்.

நாட்டுக்காக போரிட்ட சுனில் ரத்நாயக்க போன்ற படையினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்கு மறந்து விட்டதா?.

புலிகளை விடுதலை செய்யும் போது நாட்டுக்காக அந்த படையினரை விடுதலை செய்யுங்கள். இவர்கள் நாடுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க போரிட்டனர். இந்த மனுசன் ஈழத்தை உருவாக்க போரிட்டான். 

ஈழத்திற்காக போராடியவர்களுக்கு விடுதலை. சிங்க கொடிக்காக நாட்டை பாதுகாத்த படையினருக்கு சிறை. இதனையா நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு ஆடுகிறீர்கள் எனவும் கெலும் பிரியங்கர தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக் உட்பட பல சமூக வலைத்தளங்களில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை ஆரம்பித்து பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. அவர்கள் சொல்வதில் பிழை ஒன்றுமில்லை. அதற்காக இந்த புலி உறுப்பினரை என்னதான் செய்ய? ஆயுள் தண்டனை விதிக்கவா? அல்லது தூக்குதண்டனை வழங்குவதா? அப்படியாயின் கருணா போன்றவர்கள் இவரைவிடவும் அதிக கொலைகள் செய்திருக்கிறார். அவரை என்ன செய்ய ?

    ReplyDelete
  2. Enter your comment...nowdays is not war.therefore its good but someone always nagative mind.

    ReplyDelete
  3. When Sarah Fonseka was imprisoned by Ex President, this Priyankara was silent. When Karuna, Pillayan, KP were pardoned these guys were silent. Now he is bluffing. Coz he has that freedom. If he had criticised the act of ex government he would have been under the sea. All these people statements are based on political intent. If JR can pardon Gonawala Sunil, why not Maithri do it.

    ReplyDelete
  4. That types of extremist must identify the reasons why that forces in jail? They involved in the illegal criminal activities. We can not accept that.OK but the president did great job

    ReplyDelete
  5. தன்னை கொலைசெய்ய வந்தவருக்கு தானே தனிப்பட்ட முரையில் கொடுத்த மனிதாபிமான தன்டனைதானே இதுவும் என்பதை இப்படியான குருகியசிந்தனையாளர்கள் ஏற்கமருப்பது ஏன் அதுமட்டுமல்ல தூக்குதன்டனை கொடுக்கவேன்டிய சிலருக்கு பஞ்சுமெத்தையெனும் பார்லிமென்ட் பதவிகொடுத்து அமரச்செய்த முன்னால் ஜனாதிபதி செய்ததுமட்டும் இவர்கலுக்கு துரோகமாக தெரியவில்லையா தனக்கு பிடித்தவரை தலையில் சுமப்பவர்கலுக்கு கெட்டவைகள் நல்லதாகவும் நல்லவிடயங்கள் ரெம்ப..ரெம்ப கெட்டதாகவுமே சொல்லதோனும்

    ReplyDelete

Powered by Blogger.