நீர்கொழும்பு விஜயரத்தினம் கல்லூரியில் 'தேசிய தைப்பொங்கல் விழா' - சந்திரிகா பங்கேற்பு
-எம்.இஸட்.ஷாஜஹான்-
கம்பஹா மாவட்ட 'தேசிய தைப்பொங்கல் விழா'; நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இன்று (22.01.2016 வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே , முன்னாள் பிரதி அமைச்சர் பண்டு பண்டார நாயக்க, மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா, நீர்கொழும்பு வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சர்வமத தலைவர்கள், நீர்கொழும்பு பிரதேச செயலாளர், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள 12 பாடசாலைகளில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் 52 மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றார் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கடந்த வருடம் பொதுப் பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடைந்த மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் பரிச்லிகள் வழங்கப்பட்டது. கல்லூரி அதிபர் புவனேஸ்வரராஜா முன்னாள் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

Post a Comment