Header Ads



எவ­ராலும் என்னை, வெளியே தள்ள முடி­யாது - ஹஸன் அலி

-ARA.Fareel-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் எனக்கும் இடை­யி­லான உறவு தொப்புள் கொடி உறவை விட பல­மா­ன­தாகும். என்னை எவ­ராலும் வெளியே தள்ள முடி­யாது. நான் கட்­சிக்கு இடையில் வந்து சேர்ந்­த­வ­னல்ல.

தொடர்ந்தும் கட்­சி­யு­ட­னேயே இருப்பேன் என முன்னாள் இரா­ஜாங்க அமைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ள­ரு­மான எம்.ரி. ஹஸன் அலி தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­து­வத்­துக்கும் செய­லாளர் ஹசன் அலிக்கும் இடையில் முரண்­பா­டுகள் நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலையில் அது பற்றி வின­வி­ய­போதே ஹசன் அலி இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்:

‘மறைந்த தலைவர் அஷ்­ரபின் காலத்தில் கிழக்கில் 16 ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சந்­தர்ப்­பத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து நான் அடி வாங்­கி­யுள்ளேன். அன்று பல சவால்­க­ளுக்கு மத்­தியில் பாது­காத்து வந்த கட்­சியே முஸ்லிம் காங்­கிரஸ். எனக்கும் கட்­சிக்கும் இடை­யி­லுள்ள உறவு சட்­டத்­துக்கும் அப்­பாற்­பட்­டது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மக்­க­ளுக்­கு­ரிய கட்சி. வடக்­கிலும் கிழக்­கிலும் வட கிழக்­குக்கு வெளி­யிலும் அஷ்­ரபின் சிந்­த­னை­யு­ட­னேயே இயங்கி வரு­கி­றது.  கட்­சியில் நீ தான் இருக்க வேண்டும் அல்­லது இருக்க முடி­யாது என்று கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

தேசியப் பட்­டியல் நிய­மனம் எம்.எஸ். தௌபீக்­குக்கு வழங்­கப்­பட்­ட­தற்கும் எனக்கும் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை.  நான் அதனை எதிர்க்­க­வு­மில்லை. கட்சிக்கும் எனக்கும் ஆத்ம தொடர்பு இருக்கிறது. நான் கட்சியுடனேயே தொடர்ந்தும் இருப்பேன் என்றார்.

12 comments:

  1. Masha Allah epedi erukanum

    ReplyDelete
  2. நிட்சயமாக நீங்கள் கட்சியை விட்டு வௌியே செல்லவே கூடாது.

    ஆயினும் கட்சியை விட்டுமே வௌியில் துரத்தப்பட வேன்டிய ஒருவர் கட்சியில் இருக்கிறார் - அவர்தான் தலைவர் Mr. RH

    எப்போது அதனை செய்ய நாம் சக்தி பெறுகிறோமோ அப்பேதுதான் SLMC இற்கு மீன்டும் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

    தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் கட்சியின் அழிவை உங்களாலும் தடுக்கமுடியாது என்பதுவே யதார்த்தம் - ஏனென்றால் அதனைத்தன் தலைவர் இப்போது செய்துகொன்டிருக்கிறார்.

    ReplyDelete
  3. We have to learn lot from him , His maturity and gentile man ship , indirectly he says his party any way allah will bless him . Next leader.

    ReplyDelete
  4. உண்மையான செயலாளர் நீங்கள் தான்

    ReplyDelete
  5. மிகவும் பக்குவமான கட்சியை மிகவும் ஆழமாக நேசிக்கும் உள்ளத்தில் இருந்து பேசப்பட்டுள்ளதாகவே பார்க்கிறோம். ஆனால் இப்பேச்சோடு நிற்காமல் கட்சி சரியான பாதையில் பயனிப்பதுக்கு உண்மைபோராளிகளையும் மக்களையும் ஓன்று சேர்த்து முன்னேறுவதற்கு அர்பணிப்புடன் செயற்படுவீர்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  6. மிகவும் பக்குவமான கட்சியை மிகவும் ஆழமாக நேசிக்கும் உள்ளத்தில் இருந்து பேசப்பட்டுள்ளதாகவே பார்க்கிறோம். ஆனால் இப்பேச்சோடு நிற்காமல் கட்சி சரியான பாதையில் பயனிப்பதுக்கு உண்மைபோராளிகளையும் மக்களையும் ஓன்று சேர்த்து முன்னேறுவதற்கு அர்பணிப்புடன் செயற்படுவீர்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  7. Next Leader, make quickly

    ReplyDelete
  8. Enter your comment... Mahinda govement savaalaha karuthiyae athevealai. arasiyalaal ulaikkathe katchi kolhayil urithiyana oru manithar.

    ReplyDelete
  9. I know Hassan Ali leong before he became asscociated in politics. He is not a man going after anything for personal gains and has superb qualities

    ReplyDelete
  10. கறுப்பு ஆடுகளுக்குள் இருக்கும் ஒரு வெள்ளாடு அவ்வப்போது தூக்கம் விட்டெழுந்து, 'நான் ஒருவன்தான் வித்தியாசமாக்கும்!' என்று கூறிக்கொண்டிருப்பதால் மட்டும் மந்தையில் மாற்றங்கள் ஏதும் வர வாய்ப்புள்ளதா என்ன...?

    உலக வாழ்வின் இன்பங்களை துச்சமாக நினைத்து மறுவாழ்வுக்கு தேட வேண்டியவர்கள் முஸ்லீம்கள். அவ்வாறான முஸ்லீம்களுக்கு அரசியல் தலைமைதாங்குவதற்கு உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவர்கள் இன்று உலக இன்பமே கதி என்று வாழ்ந்துகொண்டு அவ்வப்போது வீரவசனங்களை உதிர்த்தபடி மக்கள் ஏமாந்துவிட்டதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றார்கள் பாவம்!

    ReplyDelete

Powered by Blogger.