யோஷித்த ராஜபக்ச மீது, கடற்படையும் நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் லெப்டினன்ட் யோஷித்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுப்பதற்காக தாம் இன்னும் பாதுகாப்பு அமைச்சின் கட்டளையை எதிர்ப்பார்ப்பதாக கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.
கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
யோஷித்த தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமையவே அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று அலவி குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்தபோது யோஷித்த கடற்படையின் பதவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment