உடல்நிலை சரியில்லையாம் - மகிந்தவின் சீன பயணம் ஒத்திவைப்பு
மகிந்த ராஜபக்ச, அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.
சீனாவில் சுமார் ஒரு மாதகாலப் பயணத்தை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அவர் நாளை மறுநாள், சீனா செல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அவர் இந்தப் பயணத்தை பிற்போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதாழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்து கொண்டிருக்கும் நிலையிலேயே, அவர் இந்தப் பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது, நாட்டை விட்டு வெளியேறினால், அதனை கோழைத்தனமான செயல் என்று தமது எதிராளிகள் பரப்புரை செய்வார்கள் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுவதாகவும், எனவே, சீனப் பயணத்தை மேற்கொள்வதற்கு இது உகந்த தருணமல்ல என்றும் அவர் கருதுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
நேற்று (09) கண்டியில் இருந்த மகிந்த ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு சீனப் பயணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது உடல்நிலை காரணமாகவே பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment