Header Ads



இலங்கைக்கு புதிய ஈரான் தூதுவர்

இலங்கைக்கு தற்போது எந்த எதிரி நாடும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சகல உலக நாடுகளிடமும் தனது நட்பு கரத்தை நீடியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று (11) முற்பகல் நடைபெற்ற சில நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவர் தமது நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சிலி, செக் குடியரவு, டென்மார்க், கௌதமாலா, ஐவரிகோஸ்ட், கம்போடியா, ஈரான் ஆகிய நாடுகள் நியமித்துள்ள இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் சைப்ரஸ் நியமித்துள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.


No comments

Powered by Blogger.