Header Ads



கவிஞா் எஸ் ஜனுாஸ் எழுதிய ”மூசாப்பும் ஒரு முழ வெயிலும்”


-அஷ்ரப் ஏ சமத்-

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தபாணத்தின் அறிவிப்பாளா்  சாய்ந்தமருதுாா் கவிஞா் எஸ் ஜனுாஸ் எழுதிய” மூசாப்பும் ஒரு முழ வெயிலும்” என்ற கவிதைத் தொகுதி வெளியீட்டு வைபவம் இன்று (24) பி.பகல் மருதாணை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் கவிஞா் அலி அக்பா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சா் ரவுப் ஹக்கீமிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.  இந் நுால் பற்றி மணிப்புலவா் மருதுாா் ஏ. மஜீத்,மற்றும் பலரும்  உரையாற்றினாா்கள்

இந் நுாலின் கவிவரிகளை மிக அழகாக நோ்த்தியாக ஜனுஸ் எழுதியிருப்பதை
சிலாகித்தும் ரசித்தும் காட்டினாா் அமைச்சா் ரவுப் ஹக்கீம் அக் கவி நுாலில் கடந்த காலத்தில் ஒரு பௌத்த தீவிர இயக்கத்தின் செயற்பாடுகளை  ஜனுசின் கவிதை வரிகள்

புலால் உனக்கு ஹலால்
புலால் உனக்கு ஹலால்
எனது ஹலால் உனக்கு ஹராம்
எனது அசைவம்
உந்தனுக்கு சைவம்

ஜந்தறிவு உனது சைவம்
ஆறறிவு உனது அசைவம்
தெருவுக்கொரு தவறனை
உனது அகராதியில் ஹலால்
தெருவுக்கு ஒரு பள்ளி
உனது தரமத்தில் அதா்மம்

உனது பாா்வைக்கு பா்தா பாதுகாப்பற்றது
எமது பெண்மைக்கு அது பாதுகாப்பானது

ஹலாலும் ஹராமும்
சைவமும் அசைவமும்
தர்மமும் அதா்மமும்
உனது வருகைக்கு பின்னால்
எதுவென்று தெரியவில்லை

மற்றவா் பால் மனதை இரும்பாக்கி
எறும்பை நேசிக்கச் சொல்லி
எந்த சமயமும் எத்தி வைக்கவில்லை
எச்சில் துப்பி உமக்கு உணவு தர
யாருக்கு புத்தி மங்கவில்லை.



No comments

Powered by Blogger.