Header Ads



முஸ்லிம் காங்கிரஸ், தலைவருக்கு விரும்பமில்லையா...??

-எஸ்.எம். றிஸ்வி ஓட்டமாவடி-

நல்லாட்சி அரசாங்கத்தினால் வாக்களிப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிய அரசியலமைப்பு மாற்றமும், பிரதேச எல்லை மீள்நிர்ணயம் என்பன சமீபகாலமாக சிறுபான்மையினரினால் பெரிதாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் எவ்வாறு செயற்பட போகின்றனர் என்ற கேள்விக் குறியிடுன் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட்டின் அறிவிப்பு வெளியானது மேற்கூறப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்த விடயங்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது முஸ்லிம் அரசியலில் பெரிதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த கால கட்டத்தில் அமைச்சர் றிஷாட் அவர்களின் இந்த அறிவிப்பானது முஸ்லிம்களுக்கு உரிய உரிமையை இலகுவாக வெற்றி பெறலாம் என்று முஸ்லிம் சமூகம் பெரிதும் எதிர்பார்த்து இருந்தது. ஏனெனில் தனித்தனியாக உள்ள இரண்டு கட்சியும் ஒற்றுமைப்பட்டு சில விடயங்களை முன்னெடுக்கும் போது இலகுவாக சாதித்து கொள்ளலாம் என்றும் இதற்கு அமைச்சர் ஹக்கீம் என்ன பதில் கூற போகின்றார் சமூகம் எதிர்பார்த்தது.

இவ்வாறான நிலையில் அமைச்சர் ஹக்கீம் அவர்களின் அறிக்கை வெளிவந்துள்ளது. அமைச்சர் றிஷாட்டின் அறிக்கைக்கு முற்றிலும் மாற்றமாகவும், சம்பந்தம் இல்லாத கருத்துக்களையும் அமைச்சர் ஹக்கீம் அறிக்கையில் கூறியிருந்தார். அதாவது அமைச்சர் றிஷாட்டுடன் இனைவதற்கு எந்த தேவையுமில்லை, நான் பாவம் பார்த்து தேர்தலில் கேட்க சந்தர்ப்பம் கொடுத்தவர் இன்று தேசிய தலைவர் என்று சொல்லுகிறார், இவரின் காலம் விரைவில் முடிவு பெறும் என்றும், மஹிந்தவுடன் சேர்ந்து கட்சியை அழிக்க நினைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சமூகத்தின் தலைவர் இவ்வாறு சம்பந்தமில்லாமல் கருத்துரைப்பது என்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். இந்த காலகட்டத்தில் அதுவும் பேரினவாதிகளின் கை ஓங்கி வரும் சந்தர்ப்பத்தில் எமக்குரிய உரிமைகளை வெற்றி காண்பதை வைத்துவிட்டு அவரை தலைவர் என சொல்வது பிழை, அவர் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று அறிக்கை வெளியிட்டு இருப்பது மக்களை பெரிதும் ஏமாற்றத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும் இரண்டு தலைவர்களும் கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஒற்றுமைப்பட்டு தேர்தல் கேட்டார்கள். தேர்தலுக்காக ஒன்று சேர்ந்த தலைவருக்கு ஏன் சமூகத்தின் உரிமைக்காக ஒன்று சேர முடியவில்லை என்பது இன்று சமூகம் முன்னுள்ள கேள்வியாகும். முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமை பற்றி பேசி வரும் சமூக ஆர்வாலளர்களின் முயற்சி வெற்றியடையவே மாட்டாது என்பது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அறிக்கை மூலம் ஊர்ஜிதப்பட்டுள்ளது.

4 comments:

  1. Kettle calling the pot black

    ReplyDelete
  2. As you all aware, this Rauf is bloody selfish. He does not care about the community. He always worried about himself. Some people in the community know how this Rauf and his father-in-law made money. I do not want to expose his cunning nature. Ask Rauf to shut his bloody mouth.

    ReplyDelete
  3. இவர்களது தல-தளபதி விளையாட்டில் சமூகத்தின் விடியலுக்கான அரசியல் இரண்டாம் பட்சமாகிப்போகின்றது - அவ்வளவுதான்!

    ReplyDelete
  4. எம் எஸ் றிஸ்வி அவர்களே, இவர்கள் இருவருக்கும் இந்த அரசியல் யாப்பு விடயத்தில் தெளிவான ஒரு திட்டமோ ஆழமான அறிவோ கிடையாது. எனவே விலை போகாத, சோரம் போகாத ஒரு நிபுணர் குழுவை ( இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம்) நியமித்து அதன் மூலம் இந்த விடயத்தை கையாள்வது தான் மிகவும் நல்லது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பாவர்களையும் இணைத்துக் கொள்ளலாம். ( கடந்த காலத்தில் இதே மாதிரியான ஒரு அரசியல் தீர்வு விடயம் வட்டமேசை மகா நாடு என்ற பெயரில் முன்னெடுக்க பட்டது அதில் முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பில் பதூதீன் மஹ்மூத் அவர்கள் தலைமை இல் தலைவர் அஸ்ரப் அவர்கள் செயலாளர் ஆகவும் பங்கேற்றது - அனால் தலைவர் அஸ்ரப் அவர்களாலேயே அனைத்து விடயங்களும் கையாளப்பட்டது.)

    ஹகீம் அவர்களும், ரிசாத் அவர்களும் சில்லறை வியாபாரிகள். ரிசாத் அவர்கள் ஹக்கீமுடன் சேர்ந்து வியாபாரம் செய்து விட்டு இப்போது தனியாக வியாபாரம் செய்கிறார். அந்த வகையில் ரிசாத் அவர்கள் துரோகம் செய்தவராக பார்க்கப்படுகிறார். ஆனால் ரிசாத் அவர்களின் கடை சிறிதானாலும் நன்றாகவும் பளபளப்பாகவும் நல்ல விளம்பரமும் செய்கிறார். ஹகீம் அவர்களுடன் சேர்ந்து செய்வம் என்ற ரிசாத் அவர்களின் அறிக்கையும் ஒருவகையான விளம்பரம் தான். ஆனால் இரண்டு சில்லறை கடை இருப்பது பாமர மக்களாகிய முஸ்லிம்களுக்கு நல்லதல்ல. இது மொத்த வியாபாரிகளுக்கு (ரணில், மைத்திரி, ராஜபக்ச.....) தான் நல்லது. அதே நேரத்தில் ஊர் ஊராக, தெருத்தெருவாக வியாபாரம் செய்யும் (முகவர்கள் ) வியாபாரிகளுக்கு இது நல்லதே . ஒரு வியாபாரி இல்லாவிட்டால் மற்ற வியாபாரி. பாவம் அப்பாவி முஸ்லிம்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்.

    நீங்கள் எந்த வியாபாரி பக்கமோ தெரியவில்லை. ஆனால் புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், சமூக பற்றுள்ள இளைஞர்களும் இவர்களை தேவையான இடத்துக்கு முன் நகர்த்தி செல்வார்கள் என்பது எமது அனுமானம் ஆகும். இதை செய்தும் காட்டியும் உள்ளார்கள். ராஜபக்சவிடம் இருந்த ரிசாத் அவர்களும், ஹகீம் அவர்களும் ( ரிசாத் அவர்கள் மிகவும் நன்றாக தனது வியாபரத்தை முன்னெடுத்து சென்றார். ஹகீம் அவர்கள் கைக்கு சேதாரம் இல்லாமல் ஓரளவு தன்னை காப்பாற்றி கொண்டார்) துண்ட காணோம், துணியைகானோம் என்ற நிலையே ஏற்படும் என்றுணர்ந்து MY3, ரணில் பக்கம் ஓடி வந்தார்கள் தானே.

    ReplyDelete

Powered by Blogger.