கல்முனை நகர அபிவிருத்திக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ரணில்
(ஹாசிப் யாஸீன்)
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம.ஹரீஸ் தெரிவித்தார்.
'கிழக்கில் முதலிடுவோம்' வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (28) வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அங்கு தெரிவித்ததாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் தெரிவிக்கையில்,
புதிய நல்லாட்சி அரசாங்கம் நாட்டிலுள்ள நகரங்களை சகல வசதிகளுடன் கூடிய நகரமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறது. இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை நகரமும் ஒன்றாகும். இதனை சகல வசதிகளும் கொண்ட நகரமாக அபிவிருத்தி செய்ய இந்த மாநாட்டுக்கு ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ள முதலீட்டாளர்கள் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரமர் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் மொத்த தேசிய வருமானத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு நல்ல நிலையில் உள்ள போதும் அதனை மேலும் அதிகரிக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கையினை பாராட்டுகின்றேன் என்றார்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான தொழில் பேட்டைகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள், நகரை அழகுபடுத்தல் இது போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளது என பிரதமர் இதன்போது தெரிவித்ததாக பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

Post a Comment