Header Ads



மைத்திரியின் சுயரூபம், வெளியே தெரிகிறது...!

-விஜய வாஸ்கரன்-
  
இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை தடை செய்யப்போவதாக மைத்திரி அறிவித்துள்ளார். சமாதானப் பிரியராக தன்னைக் காட்டிக் கொள்ளும் மைத்திரியின் சுயரூபம் இதிலிருந்து வெளியே தெரிகிறது. 

இனவாதியாக, மதவாதியாக, வேற்றுமத காழ்ப்புணர்வுள்ளவராக இதிலிருந்து அடையாளம் காண முடிகிறது.

இது இந்து மதவாதிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக உள்ளதால் மௌனமாக உள்ளனர். கிறஸ்தவ மதவாதிகள் மதில்மேல் பூனைகள் போல சத்தம் இன்றி உள்ளனர். அதைவிட இஸ்லாமிய அரசியல்வாதிகள் மௌனம் வெட்கத்துக்குரியது.

உணவு பழக்கம் ஒருவனது உரிமை. அதை தடுப்பது உரிமை மீறல் ஆகும். சீனர்கள் பாம்பு, நாய், தவளை என்பவற்றை உண்ணுகின்றனர். நாம் பன்றி ஆடு கோழி என்பவற்றை உண்ணுகின்றோம். இப்படி ஒவ்வொரு நாடும் இனமும் வெவ்வேறான உணவுகளை உண்ணுகின்றனர். இதில் அருவருக்கவோ அல்லது குறை கூறவோ எதுவும் இல்லை.
இன்று இலங்கையில் பலரும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுகின்றனர்.

அரசியலுக்காக இப்படி ஒரு சட்டம் உருவாவது நல்லதல்ல. இதில் சுயநலத்தைத் தவிர மதநலம், ஜீவகாருண்ணியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதை அரசியலாக்காமல் பேசி மௌனிக்கச் செய்வது பொறுப்புக்களில் உள்ளவர்களது கடமை.

ஜனநாயக ரீதியான வெற்றியை தக்கவைப்பதற்காக அரசு மலினமான செயல்களில் இறங்குகிறது. சிறுபான்மை இனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாட்டிறைச்சி உண்பது என்பது புதிதான விசயம் அல்ல. அதை அரசியலாக்குவதும், மதரீதியாக அணுகுவதும் தவறு. நான் கூட ஏழு வருடங்கள் சைவ உணவுகளை சாப்பிட்டவன்.தனி மனித உரிமைகளில் தலையிடுவது தவறு. இந்தியாவை பின்பற்றிய அரசியல்வழிகளில் இதுவும் சேரந்துவிட்டது.

3 comments:

  1. உயிர் வதை என்றால் ஆடு ,பன்றி ,கோழி (நாளொன்றுக்கு பல்லாயிரம் கோழிகள் )அறுக்கப் படுவது உயிர்வதை இல்லையா ?ஏன்மாட்டுக்கு மட்டும் இவ்வளவு கரிசனை .

    ReplyDelete
  2. இவருக்கு மோதி மோகம் my3 modi3

    ReplyDelete

Powered by Blogger.