Header Ads



விடியும் வரை தூங்காமலிருந்த யோசித்த, தந்தை கைவிடமாட்டாரெனவும் நம்பிக்கை

விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் கொழும்பு ரிமாண்ட் சிறைசாலைக்கு அழைத்துவரப்பட்ட யோசித்த அங்குள்ள கட்டணம் செலுத்தப்பட்ட சிறைச்சாலை அறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் யோசித்த ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்ட முதல் நாள் இரவை விடியும் வரை தூங்காமல் கழித்ததாக சிறைசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான இடங்களில் என்னால் உறங்க முடியாது என ஆதங்கப் பட்டதாவும் எனது தந்தை என்னைக் கைவிட மாட்டார் எனவும் யோசித்த தெரிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொதுமக்களின் வரிப்பணத்தில் 'ராஜகுமாரர்க'ளாக வாழ்ந்துவிட்டு இப்பொழுது சிறைவந்தால் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும் அண்ணா - பொறுத்துக்கொள்ளுங்கள் மொத்தக்குடும்பத்தினரும் வந்துசேர்ந்த பின்பு தூக்கம் வந்தாலும் வரலாம்.

    ReplyDelete

Powered by Blogger.