Header Ads



மஹிந்த ராஜபக்சவுக்கு "பீக்கொக்" வீட்டை வழங்கவேண்டாம் - மனைவியும், பிள்ளைகளும் போர்க்கொடி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வீடு ஒன்றை அன்பளிக்கவுள்ள வர்த்தகரான ஏ.எஸ்.பி லியனகே என்பவர் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 4ம் திகதியன்று ஆஜராகுமாறு அவர் கேட்கப்பட்டுள்ளார்.

இராஜகிரியவில் உள்ள பீக்கொக் ஹவுஸ் என்ற வீட்டை,  ராஜபக்சவுக்கு அன்பளிப்பாக வழங்க லியனகே திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டமைக்கு அமைய தாம் அந்த வீட்டை மஹிந்தவுக்கு வழங்க தீர்மானித்தாக லியனகே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் இணக்கத்துக்கு வர முடியாதவாறு தமது மனைவி மற்றும் இரண்டு மகள்மார் தமக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் லியனகே தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. As long as Mr Liyanage is not forced to give the house then ok. Gifting someone is his individual preference, regardless of whom he is gifting it to.
    I don't think any others will have a say or have any influence apart from his immediate family like on this case.

    ReplyDelete

Powered by Blogger.