றிஷாட் பதியுதீனுக்கு, ஒரு திறந்த மடல்...!
-A.A.சுக்ரி, ஆசிரியர்,
பள்ளிவாசல்துறை.
2016.01.01 அதிகாலை 2.52-
அமைச்சர் அவர்களுக்கு முதற்கண் எனது பணிவான ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.
நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். இந்தக் கடிதத்தை உங்களிடம் யாராவது தருவார்கள் அல்லது நீங்கள் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
உண்மையிலேயே, நான் அறிந்த வகையில் நீங்கள், மனிதப்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல மனிதர், அப்பழுக்கற்ற ஒழுக்க சீலர்,இடம்பெயர்ந்த மக்களின் மீது பாசமுடையவர்,அரசியல் சாணக்கியமுடையவர்,ராஜதந்திரம் தெரிந்தவர்,மதிநுட்பமுடையவர்,எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அடிமுதல் நுனி வரை ஆழமாக தெரிந்து வைத்திருக்கும் எங்களில் ஒருவர்.
மேற்சொன்ன உயர்த்தகமைகளைக் கருத்திற் கொண்டு எத்தனையோ விமர்சனங்களுக்கு மத்தியில் உங்களின் தேவையை உணர்ந்து நாங்கள் உங்களை மூன்று முறை தொடர்ந்து அமைச்சர் ஆக்கினோம்.
மக்களை உசுப்பேற்றும் வீரவசனங்களை மட்டும் தேர்தல் காலங்களில் பேசித்திரியும் முஸ்லிம் காங்கிரஸை, உங்களுக்காக வன்னியை விட்டும் தூக்கி வீசினோம்.
இன்றும் சொல்கிறோம்.நாளையும் சொல்வோம். நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும்.நீங்களின்றி வன்னியில் எங்களுக்கு அரசியல் இல்லை.ஏனென்றால் அந்தளவு எங்கள் மக்களுக்கு உங்கள் சுயநலமற்ற சேவை சென்றடைந்திருக்கிறது.
உங்கள் மூலம் தான் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று, இன்னும் நாங்கள் நம்பியிருக்கிறோம்.
அடுத்து, விடயத்திற்கு வருகிறேன்.
இங்கு முசலிப் பிரதேசத்தின் மூன்று முக்கிய பிரச்சனைகளை, 2016 ற்குள் தாங்கள் தீர்த்துத் தர வேண்டும் என இக்கடிதம் மூலம் 'வன்னி விடியல்' குழு மற்றும் முசலி மக்கள் சார்பாக அன்பாக வேண்டிக்கொள்கிறேன்.
(01.)
மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி ஆகிய மூன்று கிராமங்களும் சட்ட ரீதியாக 2012.10.10 வர்த்தமானி அறிவித்தலின் படி வில்பத்து சரணாலயத்துக்கு உரித்துடையதாகும்.அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதன் மூலம் அக்கிராமங்களை விடுவித்துத் தாருங்கள்.
(02.)
புத்தளம்-மறிச்சுக்கட்டி பிரதான பாதை(B379) வழக்கு சென்றுகொண்டிருக்கிறது.இதில் 2010 இருந்து நீங்களும் அரச தரப்பைச்சார்ந்தவர்களோடு வழக்கில் உள்ளீர்கள்.ஆனால் எந்தவொன்றும் நடக்கவில்லை.மேலும் இப்பாதைக்கான செலவுகள் மற்றும் இதர வேலைகளை செய்து தருவதாக 'வன்னி விடியலுக்கு' வாக்குறுதியும் தந்துள்ளீர்கள்.ஜனவரி 21இல் மீண்டும் வழக்கு விசாரணை உள்ளது.எனவே இப்பாதையை திறப்பதற்கான ஏற்பாடுகளை தயவு செய்து இப்பாமர மக்களுக்காக செய்து தாருங்கள்.
(03.)
வன்னியிலே ,முஸ்லிம்களுடைய கிராமமான சிலாவத்துறை முற்று முழுதாக கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.அதற்காக வேண்டி பல தடவைகள் அறிக்கை விட்டும், ஒப்பந்தம் செய்தும் இருக்கிறீர்கள்.நன்றிகள்.
ஆனாலும் ஒரு பயனும் கிடைக்கவில்லை.இருந்தாலும் வடக்கில் தமிழர்களின் காணிகள் விடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
எனவே தங்களின் அரசியல் உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலாவத்துறையை மீட்டித்தாருங்கள்.
சிலாவத்துறை மக்கள் தங்களுக்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். (குறிப்பு :- வன்னியில் பிடிபட்ட கிராமங்களுள் முஸ்லிம் கிராமம் இது மட்டுமாகத்தான் இருக்கும்.)
அமைச்சரே!
நான் மேலே சொன்னவை தனிப்பட்ட என்னுடைய தேவையல்ல.அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட,நொந்துபோயுள்ள,வறுமைப்பட்ட,LTTE யால் இரக்கமின்றி விரட்டப்பட்ட, உங்களைப் போல் அகதியாக்கப்பட்ட என்னுடைய சமுதாயத்தின் தேவைகள்.
2016.01.01 இல் தங்களுக்கு முதல் கடிதமாக மூன்று கோரிக்கைகளை மட்டும் கேட்டவனாக,நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்களிடம் இக்கடிதத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
This letter proves that Muslims are cheated by "Yahapalanaya".
ReplyDeleteஅரசியல் வாதிக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன என்று திரு. குமார் பொன்னம்பலம் அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் அளித்த பதில் " நாளை நான் இது செய்வேன் அது செய்வேன் என்று கூற தெரிந்திருக்க வேண்டும். பின் நாளை மறு நாள் வந்து, நேற்று ஏன் இது நடக்கவில்லை அது நடக்கவில்லை என்று காரணம் கூற தெரிந்திருக்க வேண்டும்"
ReplyDeleteசுக்ரி ஆசிரியர் அவர்களே, அமைச்சர் ரிசாத் அவர்களை நீங்கள் முன்று முறை அமைச்சர் ஆக்கி உள்ளீர்கள் என்று கூறுகிரீர்கள்.... நாம் நினைக்கிறோம் அமைச்சர் ரிசாத் அவர்கள் தகுதி வாய்ந்த அரசியல் வாதி தான்.
Ilma, Yahapalanayaa...??? or Minister Risadh Badurdeen..????
Many more disappointments for MUSLIMS are in store.
ReplyDelete