இலஞ்சம் வாங்கிய, பௌத்த பிக்கு கைது
கேகாலை, ரங்வல மஹாநாக மஹா வித்தியாலயத்தின் அதிபரும் பாடசாலையில் எழுதுவிளைஞர் பதவியில் இருக்கும் பௌத்த தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தரம் 6 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 60,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலின்படி இவர்கள் பாடசாலை வளாகத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியன்த சந்திரசிறி தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
புத்தனும் போன பாதை தான்....
ReplyDelete..... என்னும் போதை தான்.
மத குருக்களுக்கு தனி நீதி மன்றம் கேட்டுள்ளார்கள் அதேபோல் தனி சிறைச்சாலையும் அமைத்தால் நல்லது அவ்வாறு அமைக்கிற வரையும் இப்போதிருக்கும் சிறைச்சாலையில் அடைக்க வேண்டியதுதான்.
ReplyDeleteஅவர்கள் தனியாக கேட்பதன் ரகசியம் இப்படியான ஊத்தையெல்லாம் வெலியே தெரியாமல் கழுவி சுத்தவாழிகள் ஆவதற்கே......அந்தலவு அசிங்கம்பன்னுகின்றார்கள்.
ReplyDelete