அல்ஜெசீரா தொலைகாட்சிக்கு, மைத்திரி வழங்கியுள்ள செவ்வி..!
இலங்கைக்கு எதிராக எந்த தருணத்திலும் யுத்தக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அல்ஜெசீரா தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையே ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்திருக்கிறது.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடு என்ற அடிப்படையில், அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை படையித்தரப்பினர் சர்வதேச சட்டதை பாதுகாப்பதற்காக செயற்பட்டதாகவும், விடுதலைப் புலிகளை அதனை மீறி செயற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் படைத்தரப்பில் யாரேனும் குற்றம் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Post a Comment