Header Ads



மீயல்லை "அல் மினா" வின் முன்னேற்றம்

ஒரு ஊரின் முன்னேற்றத்தில் பாடசாலை முக்கியமானது.ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் கவலையும் மிக முக்கியமானது. எல்லாவற்றையும் விட பெற்றோரினதும் சமூகத்தினதும் பொறுப்பு மிக முக்கியமானதாகும். கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

மீயல்லை வரலாற்றில் 'அல் மினா' வின் வளர்ச்சி பிரதான ஒரு பங்கை வகிக்கின்றது .தளிர் விட்டு வளர்ந்து கொண்டிருந்த எமது பாடசாலையின் வளர்ச்சியில் 1980 களில் புதுத் திருப்பமும்,துரிதமும் ஏற்படுத்தப் பட்டது . மிகவும் சிறந்த விழுமியங்களையும் ஆளுமையையும் கொண்ட அந்த உள்ளூர் ,வெளியூர் ஆசிரியர் குலாம் அந்த வளர்ச்சியின் மாலுமிகளாக இருந்தார்கள் . இதனால் தென் மாகாணத்தின் அநேகமான முஸ்லிம் ஊர்களில் இருந்தும் மாணவர்கள் அல்மினாவை நோக்கி ஈர்க்கப்பட்டனர் .வலஸ்முல்லை ,யக்கஸ்முல்லை ,தங்காலை ,நலகாமம் ,போலானை ,ஹம்பாந்தோட்டை ,கிரிந்தை ,மாத்தரை ,கந்தரை ,திக்வல்லை ,வெலிகாமம் ,போருவை , ஹொரகொடை போன்ற இடங்களில் இருந்து வந்தவர்கள் ஊரில் தங்கிப் படித்தார்கள் .அதேபோல் மிகவும் கிட்டிய ஊர்களில் இருந்து வந்தவர்கள் தினமும் பயணிக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அன்று அவ்வாறு அல் மினாவில் கல்வி கற்றவர்கள் இன்று பல்வேறு துறைகளிலும் வேரூன்றி உள்நாட்டிலும் அமெரிக்கா , ஐக்கிய இராச்சியம் , இத்தாலி ,சவுதி அரேபியா ,குவைத் ,கட்டார் , ஐக்கிய அரபு இராச்சியம் ,பஹ்ரைன் ,ஓமான் போன்ற நாடுகள் உட்பட இன்னும் உலகின் பல பாகங்களிலும் பல உயர் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மீயல்லையின் வரலாறு கண்ட உண்மை .

அன்றைய ஆசான்களால் நடப்பட்ட கல்வி மரம் வளர்ந்து விருட்சமாகி கனிகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஆரம்பித்தது . அந்தக் காலப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட பட்டதாரிகள் தான் இன்றைய அல் -மினா வை நிர்வகிக்கிறார்கள் என்பது அந்த ஆசான்கள் கண்ட கனவுகளில் இன்னொன்று .

இரண்டு வைத்தியர்களையும் இன்னும் பல துறைசார் நிபுணர்களையும் உருவாக்கி இருக்கும் 2015 ஆம் வருடத்திற்கான க .பொ.த .உ .த பெறுபேறுகள் திரும்பவும் அல்மினா மணம் வீச ஆரம்பித்துள்ளதை காட்டுகின்றன . அதே போல் வெளி ஊர்களில் படித்த மீயல்லை மாணவர்களும் மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் , இவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களையும் வழங்குவானாக .

2015 ஆம் ஆண்டுக்கான க .பொ .த உ.த. பரீட்சையில் மீயல்லை மாணவர்களின் சாதனை
Mishfa 2A,B(Biology)
Muzna A,B,C (Biology)
Arts:
Nafla 2A,B
Zimra 2A,B
Izana 2A,B
Mizha 2B,C
Mushfa B,2C
Shakira C,2S
Afra 3C
Inshafa 3C


2 comments:

  1. Women are studying to help their families. But, Boys finish their studies early to help Arabs and Shop mudalalies to build their wealth.

    ReplyDelete

Powered by Blogger.