முஸ்லிம்களின் கவனத்தை திசைதிருப்ப, கையாளப்பட்டுள்ள குள்ளநரி தந்திரம்..!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொது பல சேனா முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான ஒரு இரகசிய சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதில் பேசப்பட்ட விடயங்கள் பரம இரகசியம். ஐனாதிபதி ஊடக தரப்பில் இருந்து இதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இது வழமையானது. ஆனால் பொதுபல சேனா இந்த சந்திப்பு திருப்திகரமானதும் வெற்றிகரமானதும் என அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் பின் ஜனாதிபதியின் சில அறிவிப்புக்கள் யோசிக்க வைத்துள்ளன. முதல் அறிவிப்பு மாடுகள் அறுப்பது தடை செய்யப்படும் என்பது. அடுத்த அறிவிப்பு இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளினல் வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது. பிபிசிக்கு அண்மையில் சிங்களத்தில் வழங்கிய பேட்டியில் இது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஜனாதிபதியின் முன்னைய நிலப்பாடு இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் இப்போதைக்கு முஸ்லிம்களுக்கு முக்கியமானதல்ல என்பதால் அதுபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.
இப்போதைக்கு மாடறுப்பு தடை பற்றி பார்ப்போம். எமது சமுகம் இதுபற்றி அலட்டிக் கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது. உண்மையில் இது நாம் அலட்டிக் கொள்ளவோ கவலைபடவோ வேண்டிய ஒரு விடயமே அல்ல. இந்த துறையை வாழ்வாதாரமாகக் கொண்ட பலருக்கு ஏற்கனவே மகிந்த அரசில் ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது. அவர்கள் வேறு வழிகளை தேடிக்கொண்டு விட்டனர். எஞ்சி உள்ளவர்கள் சொற்ப தொகையினர்தான். அவர்களுக்கும் இறைவன் நிச்சயம் வேறு வழிகளைக் காட்டுவான்.
இந்த விடயத்தை நாம் கண்டு கொள்ளாமல் சிறிது காலம் விடுவோமானால் சம்பந்தப்பட்டவர்களே இதற்காக வருந்தும் நிலை நிச்சயம் ஏற்படும்.
காட்டில் வாழும் சிங்கம் புலி ஓநாய் போன்ற மிருகங்கள் மான் மரை போன்ற மிருகங்களை வேட்டையாடி வாழ வேண்டும் என்பது இயற்கை நியதி. கடலில் வாழும் திமிங்கிலம் சுறா என்பன சிறிய உயிரினங்களை உண்டுதான் வாழ வேண்டும். ஊர்வனங்களின் உயிர் வாழ்வும் இந்த இயற்கை நியதிக்கு கட்டுப்பட்டதுதான். இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதில் கைவைத்தால் இயற்கை உயிர்நிலை சமநிலை பாதிக்கப்பட்டு மனிதன் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும் மாடறுப்பு என்பது இந்த நாட்டில் முஸ்லிம்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இறைச்சிக்காக மாடுகளை அறுப்பது முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை விற்பனை செய்வது முஸ்லிம்கள் மட்டுமா?
இந்த நாட்டில் ஒரு தினத்தில் அறுக்கப்படும் மொத்த மாடுகளின் இறைச்சிகளை தின்று தீர்ப்பவர்களும் முஸ்லிம்கள் மட்டும் அல்ல. எனவே இந்த விடயத்தை புத்திசாலித்தனமாக அனுகி நாம் இந்த முடிவை ஏற்று மெளனம் காத்தால் எமக்காக மற்றவர்கள் பேசும் நிலை நிச்சயம் ஏற்படும்.
இதில் ஹஜ் கால குர்பானி கடமை பிரதானமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அதற்கும் மாற்று வழிகள் உள்ளன. அந்த மாற்று வழிகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஜம்மியத்துல் உலமாவை சார்ந்தது.
இலங்கையில் இப்போது மிகப்பரவலாக பேசப்படும் விடயம் உத்தேச அரசியல் யாப்பு யோசனைகள் பற்றியது. இதில் தமிழ் தரப்பு தனது கோரிக்கைகளை வென்றெடுக்க முனைப்புடன் செயற்படுகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல் தரப்பு இதில் எந்த கவனமும் செலுத்தாமல் மாட்டிறைச்சிக்காக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கேவலமான நிலைமை. அரசியல் யாப்பு விடயங்களில் இருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்ப கையாளப்பட்டுள்ள ஒரு குள்ள நரி தந்திரமே மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பு.
மாட்டைவிடவுமா அரசியல் யாப்பு
ReplyDeleteஎமக்கு முக்கியமானது?
முஸ்லிம் விவகார அமைச்சரே மாடறுத்தல் மார்க்க கடமை என்று
சொன்ன பிறகும் அதைவிட அரசியல் அமைப்பா முக்கியம்?
இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்மாவுக்குபிறகு மாடறுக்கும் உரிமைகோரி சகல பள்ளிகளிலிருந்தும் பேரணிகள் நடத்துவோம்.
முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்று பட்டு
மாடறுக்கும் உரிமை கோரி ஜனாதிபதியோடு பேசப்போகிறார்களே
இதிலிருந்தே புரியவில்லையா
மாடறுத்தல் ஸ்ரீ லங்கா முஸ்லீம்களுக்கு எவ்வளவு முக்கியமானதென?
நான் ஒரு முஸ்லிம். என்னுடைய இனத்தின் உரிமையை கருதி நான் இதை குறிப்பிட்டுள்ளேன். அதேபோல் அவர்அவரின் இனத்துக்காக குரல் கொடுக்கத் உரிமை எல்லோருக்கும் உள்ளது.
Deleteஇத்த்தானே எப்பவோ சொன்னோம். My3 was and is more racist than MR. My3 ஆட்சிக்கு வர ஒத்துழைத்ததே்Zionist கள் தான்.
ReplyDeleteCorrect
DeleteStill early to predict Maitree worst than MR, despite beef issue.
DeleteStill early to predict Maitree worst than MR, despite beef issue.
Deleteஎவன் வந்தாலும் லாபம் மந்திரிக்கு நஸ்டம் கஸ்டம் முஸ்லீம்கலுக்கு
ReplyDeleteDear Mohamed Naushad
ReplyDeleteMay ALLAH the ALMIGHTY bless you for ever to highlight the conspiracy to divert Muslim's attention from the proposed constitution amendment. Banning beef - In sha ALLAH will definitely back fire than the so called conspirators thinks. Also thank you for explaining the importance of concentrate on the proposed constitution amendments.
Dear Muslim intellectuals and community leaders - it is now our responsibility to make more and awareness among the society to ignore the beef issue and to concentrate on the constitution amendment.
Please remember -If we don't eat beef, we will not die and will find alternatives but if we miss our voice in the proposed amendment of the constitution, we will regret it for generations.
மன்னர் முஸ்லிம் நீங்கள் ஒன்று சேர்க்க மிஸ் பண்ணிடிங்க மாடு அறுக்க வேண்டி 2 ராகத் சுன்னத்
ReplyDeleteமாற்று மதத்தவர்கள் கல்வி செல்வம் மருத்துவம் என்று முன்னேறிக்கொண்டு போகின்றார்கள் நாம் மாட்டிறச்சி சண்டை போடுகிறோம் மூசா நபியின் கவும்களும் சுவன சாப்பாட்டை விட்டுவிட்டு கடலைக்கும் பயறுக்கும் சன்டை பிடித்தார்கள் இது நமது சமூக தலைவிதி
ReplyDeleteMM I repeat If you stop eating beef you will think properly
ReplyDeleteI agree with the writer. Important things should get the priority. More than half of our community are diabetics,hypertensives or patients with heart problems. Definitely your doctor is going to advice to stop eating meat. Obeying the country's rules and regulations is part of Islam when they are done so.
ReplyDeleteComing back to prohibiting the slaughter of cattle which may boomerang on them by affecting the farmers.
When the bulls are matured they start troubling the cows which lead to more siblings and the maintenance costs will go up
People have turned to machines and bulls have no duty on the fields
No more bullock carts could be seen even in the villages.
These bulls jump out of the fence and go and destroy someone else's cultivation, and the owner has to pocket out a big some of money in addition to the maintenance costs.
So the cattle farmers usually sell their matured bulls to the butchers keeping one for reproduction.
Most of the farmers sell them for urgent need of money also in case deaths,births,puberty ceremonies and so on.
People breed cows for the milk if they can't get any thing from bulls other than extra expenditure what will they do?
We have to wait patiently!
நமது அரசியல் வாதிகள் இப்ப மேலதிக ஆசனதிர்காக சண்டை போடுவதை நீங்கள் மறந்து விட்டீர்கள் மாடு மட்டும் இல்ல
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வ வ,
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய உறவுகளே இந்த கட்டுரையை நிதானமாக சிந்திக்கும் உள்ளங்களுக்கு நிச்சயமாக படிப்பினை இருக்கிறது.
அதாவது கட்டுரையாளர் குறிப்பிட்டது போல இலங்கையில் சாத்தரனமாக ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் 8000 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன. அப்படியானால் மாதம் 8000 X 30 = 240000 மாடுகள் மீதமாகும். குறைந்தது நாம் 6 மாதங்களுக்கு விட்டுக் கொடுப்போமானால் 1440000 மாடுகள் மீதமாகும். இத்தனைக்கும் இவ்வளவு மாடுகளையும் வளர்ப்பவர்கள் முஸ்லிம்கள் மாத்திரம் இல்லை.
இதில் 80% மான மாடுகளை வளர்ப்பவர்கள் ஏனைய வார்களே. இதில் பலரது அடிப்படை வருமானமே உள்ளது. அத்துடன் நாம் அவர்கள் எமது எல்லா உணவுகளையும் தடுக்கவில்லையே. எம்மில் 1% யும் விட குறைவானவர்களே மாட்டிறைச்சி விற்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களுக்கும் வேறு தொழில் செய்வது சாத்தியமானதே. அத்தோடு மாட்டிறைச்சி மாத்திரம் எமது உணவல்ல. பெரும்பாலும் மாதத்தில் 3 அல்லது 5 தடவை மட்டுமே இறைச்சி உண்கிறோம். அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து இலங்கையில் பொறுமையுடன் எமது அஹ்லாக்குகளை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வெளிக்காட்ட முன்வருவோமேயானால் சிறந்ததொரு முடிவினை எமது சமூகத்துக்கு வழங்க அல்லாஹ் போதுமானவன். ஏனென்றால் அல்லாஹ் எப்போது பொறுமையாளர்களுடனேயே இருக்கிறான்.
இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டது போல இது எமது சிந்தனையை திசை திருப்ப எடுக்கப்பட்ட ஒரு சதியாக ஏன் இருக்கக் கூடாது? நிச்சயமாக அது சாத்தியமானதே. ஏனென்றால் மாடு அறுப்பு தடை விடயம் சாத்தியமற்றது என்பது நிச்சயமாக அவர்களுக்கு தெரிந்ததே. இருந்தும் இதில் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் இதன் பின்னால் மிகப் பெரியதொரு சதியை நிகழ்த்த எமது சிந்தனையை திசை திருப்புகிறார்கள் என்பதுதான் உண்மை என உணர வேண்டும்.
அதாவது, எமது சமூகத்தின் இருப்பை மாற்றபோகிற அரசியலைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தக் கூடாது என்பதை ஏனைய இரு சமுக தலைமைகளும் மிகக் கவனமாக இருக்கும் என்பதை நாம் எப்போது மறந்து செயற்படக் கூடாது.
Assalamu alaikum
ReplyDeleteDear muslim brothers,
This issue is might have planned & planing.So,be tolerate
almighty allah should assist us but concentrate on shias,as well as jous wrong activities which not badly affect our muslim communities.
ReplyDeleteகட்டுரையாளர் சொன்னது போல
பாதிக்கப் படப் போவது நாமல்ல
பெரும்பாண்மை இனமே,
மாட்டை இறைச்சிக்காக விற்காவிட்டால்
நடக்கப்போவது பற்றி சற்று கற்பனை செய்து
பார்த்தால் எதிர்காலத்தில் நடக்கப்போவது
புலணாகும் நல்ல நல்ல காட்சிகளை எம் கண்கலால்
காணலாம் இன்ஷா அல்லாஹ்.....................................................
மாடறுப்பு தடைச்சட்டத்தை ஒரு முஸ்லிம் அமைச்சறே
பாராளுமண்றத்துக்கு கொண்டு வரின் ரொம்ப நன்றே.
good
ReplyDelete