Header Ads



"இன்றைய அரசாங்கத்தில் வாய்ப்பேச்சு, வீரர்களே அதிகம் இருக்கின்றனர்"

அரசாங்கத்தில் செயல் வீரர்கள் எவருமில்லை எனவும் வாய்ப்பேச்சு வீரர்களே அதிகம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

பதுரலிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையை மேம்படுத்துவதாக வாய்ச் சவடால் விட்ட போதிலும் நாட்டின் சுகாதார நிலைமைகள் மிகவும் துரதிஸ்டவசமான நிலையில் காணப்படுகின்றது.

பேருவளை தேர்தல் தொகுதியின் மூன்று வைத்தியசாலைகளுக்கு வசதிகளை செய்து கொடுக்க முடியாத தலைவரினால் முழு நாட்டுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா?

இந்த அரசாங்கத்தில் வெறும் வாய்ச் சவடால் விடும் அமைச்சர்களே இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் செயற்திறன் மிக்க அமைச்சர்கள் நாட்டுக்காக சேவைகளை செய்தனர்.

இன்றோ வெறும் வாய்ப் பேச்சுக்காரர்களே அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. சரியாக சொன்னீங்க பொஸ்....தூக்கம் வரும் முன் கொட்டாவி வருவதுபோல் வாய்ப்பேச்சு மாத்திரமே தவிர வேரு எதுவுமேயில்லை

    ReplyDelete

Powered by Blogger.