Header Ads



மகிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமாகயிருப்பவர்களை ஆதரிக்க வேண்டியது கடமை - பிரசன்ன

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரும் மகிந்தராஜபக்சவிற்கு விசுவாசமாகவுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களிற்கு ஆதரவாகவே எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஓன்றிணைந்த எதிர்கட்சியினர் பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவிசுவாசிகள் வேறுவேறு சின்னங்களில் போட்டியிட்டாலும் அவர்களிற்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம் என தெரிவித்துள்ள அவர் ஆபத்துகளை எதிர்நோக்கிய போதிலும் மகிந்தராஜபக்சவிற்கு விசுவாசமாகயிருப்பவர்களை ஆதரிக்கவேண்டியது தங்களது கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஓன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள ஏனைய எதிர்கட்சியினரும் அவர்களிற்காக பிரச்சாரம் செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.