Header Ads



மஹிந்த ராஜபக்ஷ, இதுவரையில் குற்றவாளியாகவில்லை - நீதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் அவர் குற்றவாளியாகவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலி புதிய நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் வரை அவர் குற்றவாளியாக கருதப்படமாட்டார் என தெரிவித்த அமைச்சர், பொலிஸ் நிதி மோசடி ஒழிப்பு பிரிவின் அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் எவராலும் செல்வாக்குச் செலுத்த முடியாது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டில் சுயாதீன நீதித்துறை காணப்படுவதனால் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

3 comments:

  1. வாக்குகளை கவர்ந்து கொள்ளும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் குற்றங்கள், அரசியல் மேடையில் பாடுபொருளாக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படும் வரை எவருமே குற்றவாளியும் இனங்கானப்படப் போவதில்லை.
    நாட்டு மக்கள் மீது அரசாங்கத்திற்கு அக்கறை இருந்தால், கிறீஸ் பூதங்களை எப்போது விசாரிக்கப் போகிறார்கள்? பார்ப்போம்.

    ReplyDelete
  2. எந்த பங்கலா டீல்

    ReplyDelete

Powered by Blogger.