"ஞானசாரரின் ஒப்புதல் வாக்குமூலம்"
-இனியவன் இஸார்தீன்-
செம் மஞ்சளாடைக்குள்
முண்டச்சாமி வேசம் போட்டுக்கொண்ட
ஆசாமி நான் என
எவரும் நினைக்காதீர்கள்
என் அந்தரங்க நாளங்களில்
அதர்ம ரத்தம் ஓடுவதாகவும்
அமைதி மானை இரையாக்க
அதிகார நரியாய்
வெறிக்கிறேன் எனவும்
சந்தேகிக்காதீர்கள்
இடுப்பொடிந்த கோழிக்கு
உரல்கிடை சொந்தம்
ஈனமுற்ற இலங்கைக்கு
இனவாதம் சொர்க்கம் என
இன்னமும் சொல்கிறார்கள்
கறந்தபால் முலை புகா
கடைந்த வெண்ணெய்
மோர் புகா
உதிர்ந்த பூவும் கிளை புகா
என்பது இயற்கை
இதில் எது நடந்தாலும்
போதி தர்ம புத்தன்
இனி இலங்கை புகான்
என்பதே நிதர்சனம்
இது
மனிதப் புனிதன் புத்தன்
மனுதர்ம பக்தியிலடைந்த
ஞானம் என்றறியுங்கள்
இருந்தாலும்
பெரும்பான்மை சனங்களே!
ஜீவகாருண்யம் மிகுந்த
புத்தனை அடியொற்றுகின்ற
புனித பிக்கு நான்
சொல்கிறேன் கேளுங்கள்
பௌத்தத்தில் பிறந்து
பௌத்தத்தில் வளர்ந்து
பௌத்தத்தில் சிறந்து
பௌத்தத்திலேயே இங்கு
சாதிக்கப் போகிறேன்
உங்களிடம்
எவ்வளவு காலமாய்க்;
கத்துகிறேன்
எனது பேச்சைக் கேட்காமல்
நீங்கள் வேறென்னமோ
செய்து கொண்டிருக்கிறீர்கள்
'நீங்கள் பேசுங்கள்...
கேட்கிறோம்
உங்கள் கொள்கைகளை'
சத்தியமாய் சொல்கிறேன்
நான்
இலங்கையர்க் கெதிரான இனவாதியல்ல
இஸ்லாத்திற்கெதிரான தீவிரவாதியுமல்ல
'மாட்டுக்கறி க்குப் பதிலாக
மனிதக்கறி சாப்பிட்டுப் பாருங்கள் '
ஏனெனில்
மனித மாமிசம் சுவையானது
மனிதனைத் தின்னுங்கள்
ஈரல்
நுரையீரல்
எதையும் விடாதீர்கள்
இதயம்
மூளை
தேவையற்றவை
அவற்றை
தூக்கியெறியுங்கள்
சத்தம் வெளியே
வரக் கூடாது
ஒரு சொட்டு ரத்தமும்
பூமியில் சிந்தக் கூடாது
ஞாபகமிருக்கட்டும்
குடலை மாத்திரம்
பாதுகாத்து வையுங்கள்
தேசத் தலைவருக்கு
மாலை போடுவோம்
மனித மாமிசம் சுவையானது
மனிதனைத் தின்னுங்கள்
அவர்களை...
'அவர்களை' த்தான் கொல்லுங்கள்
அமைதியைக் காப்பாற்றுங்கள்
'அவர்களி 'ன் அழிவில்
நம் வாழ்வு
'அவர்களி 'ன் துயரில்
நம் மகிழ்வு
'அவர்களி 'ன் சமயத்தில்
நம் ஆதிக்கம்
அதனால்
மாட்டைக் கொல்லாமல்
மனிதர்களைக் கொல்லுங்கள்
மாடு எங்கள் பன்முகம்
அது பொருளாதாரம்
அதன் பீ நறுமணம்
அதன் மூத்திரம் மங்களம்
நாம்
மாடுகளையும்
வில்பத்துக் காடுகளையும்
ஏன் இஸ்லாமியருக்கெதிரான
ஆயுதங்களையும் பராமரிப்போம்
வீட்டிலும் காட்டிலும் ரோட்டிலும்
கட்டாக் காலிகளாய்த் திரியும்
மாடுகளைப் பெருக்கி
தெளிந்த நீரோடைகளிலும்
குளம் குட்டைககளிலும்
தேய்த்துத் தேய்த்துக் குளிப்பாட்டி
இந்த தேசத்துக்கு
'புனித மாடுகள் நாடு' என்ற
பெயர் மாற்றம் செய்வோம்
மாட்டை கொன்று
மனித வயிற்றுக்குள்
புதைக்க மாட்டோம்
ஆனால்
மது போதையிலும் கூட
மவுலானா சாப்பாட்டுக் கடையில்தான்
மாட்டிறைச்சிப் பொரியல் வாங்கிச்
சாப்பிடுவோம்
உள்ளே மாட்டை
உட்கொள்ள விடமாட்டோம்
வெளியே செத்த மாட்டை
சாப்பிடத்தான் இனி
'சிறிசேன சட்டம் ' செய்குவோம்
நம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாய்
அளுத்கம பேருவல
தர்காநகர் என்னும் ஊர்களில்
உடைமைகளைத்தான்
கொளுத்தியிருக்கிறோம்
மாடுகளை நாங்கள்
மாய்த்திருக்கிறோமா?
இனி நாம்
பௌத்தத்தை இந்நாட்டில்
பாதுகாக்க வேண்டுமென்றால்
மாற்றாரைக் கொன்றாவது
மாடுகளைக் காப்பாற்றுவோம்'
Superb, tugs at my heartstrings.
ReplyDeleteExcellent, Enjoyed so much, Well done.
ReplyDeleteSuper lyrics
ReplyDeleteFantastic much enjoyed. Lyrics are perfect
ReplyDeleteமாடுகளுடன் மாநாடு
ReplyDeleteWell done! Very nice theme and language flow.
ReplyDeleteபாராட்டுக்கள்,இதன் செரியான பொருளை அவன் பார்த்தால் தற்கொலை செய்து விடுவான்.
ReplyDeleteஅப்போதுதான் மனிதர்களை கொன்ற மாடுகள் நாமே எனும் உன்மையை இந்த உலகம் உரத்துக்கூறும்...இந்தப்புகழ் பெயர் வேண்டுமானால் என்வழியே தனிவழி வாருங்கள்......
ReplyDeleteWonderful lyric....
ReplyDeleteஅருமை அருமை ரசித்துச் சுவைத்தேன் மாட்டிறைச்சியையல்ல. உங்கள் ஆக்கத்தை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.