கனடாவில் சிரிய நாட்டவர்களை வரவேற்கும் நிகழ்வில், இலங்கை முஸ்லிம்களும் பங்கேற்பு
-Zacky junaid, vancouver-
வெள்ளிக்கிழமை இரவு 08/01/2016 கனடா வந்குவேர் நகரில் நடந்த சிரியன் அகதிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியின் பின் இனம் தெரியாத நபர் ஒருவர் பெப்பர் ஸ்பறை தாக்குதல் நடத்தியதால் சுமார் 30 பெண்கள் சிறுவர் உட்பட்ட அகதிகள் பாதிக்கப்பட்டனர்.
இது பற்றி மேலும் அறிய வருவதாவது,
கனடிய முஸ்லிம் சங்கத்தினால் வந்குவேர் kingwray இல் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் சிரியன் அகதிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு அகதிகளின் ஒரு தொகுதியினர் தமது பஸ் வண்டிக்காக காத்திருக்கும் போது சைக்கிலில் வந்த பெண் அகதிகள் மீது மிளகாய் வாயுவை அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் பெண்கள் சிறுவர் உட்பட சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஷா அல்லா 09-01-2016 வந்குவேர் பிறைசேர் முசல்லாஹ் வில் சுமார் 60 சிரியன் அகதி குடும்பங்களை வரவேற்கும் நிகழ்ச்சி மக்ரிப் தொழுகைக்குப்பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகமான இலங்கை முஸ்லிம்களும் கலந்து கொள்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
Post a Comment