வசீம் தாஜுத்தீனை கொலை செய்வதற்காக, நிறம் மாற்றப்பட்ட செஞ்சிலுவை சங்க வாகனம்..?
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றிய பின்னர் அதனை குற்றச் செயல்களுக்கு (வசீம் தாஜுத்தீன்) பயன்படுத்தினார்களா என்பது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிகான் பலப்பிட்டிய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
செஞ்சிலுவை சங்கத்தின் டிபென்டர் ரகவாகனத்தை முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்சவின் சிரியலிய சவிய அமைப்பிற்கு முன்னாள் சமுகசேவை அமைச்சர் வழங்கியதாக நீதிமன்றத்திற்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்தே அந்த உத்தரவை நீதவான் வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சரிடமும் இது குறித்த விசாரணைகளை மேற் கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதேவளை முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
Tajudeen's case will go on for next five years without any outcome.
ReplyDeleteDragging the case by currentn government for the sake of some personals or foring infulence... till the time runs ( Even after engough evidences in hand)
ReplyDeleteMissusing the justice system for political gain of high people of any party.