Header Ads



"‪எமது நாட்டிற்கும், தற்கால சூழ்நிலைக்கும் சாலப் பொருந்தும்"

-Anees Bin Ali Mohamed-

மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி:

“காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.”

அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் பட்டேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்:

“காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

‪#‎பெருங்கலவரத்துக்கான_முன்னோட்டம்‬

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

இலங்கையில் சில பேரினவாத இயக்கங்கள் போடும் பித்தலாட்டங்களும் பிசைவுகளும் இவ்வாறான பாரிய சதித்திட்டம் என்பதில் ஐயமில்லை.

‪#‎இறைவன்_போதுமானவன்‬

2 comments:

  1. காந்திஜியின் வரலாரு தொட்டு இன்ருவரைக்கும் அதுவேதான் உலகில் நடந்துகொன்டிருக்கின்ரது பிள்ளயும்கிள்ளீ தொட்டிலையும் ஆட்டுகின்ரார்கள் அந்த தொட்டிலுக்குல் நமது சமூகத்தினரும் அகப்பட்டு திசைமாரிபயனிக்கின்ரார்கள் என்பதும் மரைக்கமுடியா உன்மை......

    ReplyDelete
  2. காந்தியைச் சுட்டவன் தனது கரங்களில் ஒரு முஸ்லீம் பெயரைப் பச்சை குத்திக்கொண்டிருந்தான் என்ற உண்மையை மறந்துவிட்டீர்களா என்ன..?

    காந்தியைச் சுட்டுக்கொன்றவனாகிய நாதுராம் கோட்சே நோக்கம் ஓர் இந்து. ஆனால் அவன் முஸ்லீம் பெயரைப் பச்சைகுத்திக்கொண்டு வந்து சுட்டதன் நோக்கம் மிகத் தெளிவானது.


    காந்தியைச் சுட்டதும் கூடியிருந்தவர்கள் முதல் பார்வையில் காணும் காட்சியினால் பரவும் வதந்தியை (பின்னர் உண்மை தெரியவருவதற்கிடையில்) பயன்படுத்திவிட வேண்டும் என்பதுதான்.

    அறிவுடமையும் சமயோசிதமும் மட்டுமே சமூகத்தைக் காக்கும் - மந்திரங்களால் மாங்காய்கள் ஒருபோதும் விழுவதில்லை!

    ReplyDelete

Powered by Blogger.