Header Ads



சுவிட்சர்லாந்தில் ‘அகதிகளின் வாழ்வில் ஒரு நாள்’ - உலக தலைவர்கள் கண்ணீர்


சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறும் அகதிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்ற தலைப்பில் உலக தலைவர்களுக்கு நடத்தி காட்டிய நாடகம் பார்வையாளர்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.

சுவிஸில் உள்ள டாவோஸில் உலக பொருளாதார மன்றம் கடந்த புதன் கிழமை அன்று தொடங்கியது. இதில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் உள்ள ஹோங்கோங் நகரை சேர்ந்த Crossroads என்ற அறக்கட்டளை உலக பொருளாதார தலைவர்களுக்கு நாடகம் ஒன்றை நடத்தி காட்டியுள்ளனர்.

‘அகதிகளின் வாழ்வில் ஒரு நாள்’ என்ற தலைப்பில் சுவிட்சர்லாந்து நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் அகதிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதை இந்த நாடகம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.

இந்த நாடகத்தில் சில நாடுகளை சேர்ந்த அகதிகளும் பங்கேற்றுள்ளனர். முதலில், யுத்தங்களால் பாதிக்கப்பட்டு வெளியேறும் அகதிகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை தத்ரூபமாக நடத்தி காட்டுகின்றனர்.

பின்னர், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் நுழையும்போது புகலிடம் கோருவதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை நடித்துக்காட்டுகின்றனர்.

இதன் உச்சக்கட்டமாக, பசியை போக்கிக்கொள்ள உணவிற்காக தாங்கள் கொண்டுவந்த கைபேசிகள், கை கடிகாரங்கள், ஆபரண நகைகள் உள்ளிட்டவைகளை விற்று விட்டு அதற்கு பதிலாக உணவை வாங்குவதை அகதிகள் கோப்பைகளை ஏந்தியவாறு நடித்துக் காட்டியது பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு அடுத்த காட்சியில் போலியான ராணுவ உடுப்பு மற்றும் ஆயுதங்களை ஏந்திய நடிகர்கள்(அகதிகள்), அங்கு கூடியுள்ள புலம்பெயர்ந்தவர்களை நோக்கி பலவகையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்.

இதே காட்சியில் தொலைக்காட்சி நிருபர் வேடத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் அகதிகளை நோக்கி ‘நீங்கள் அனைவரும் எதற்கும் பயன்படாதவர்கள். நீங்கள் இறந்தாலும் அது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது’ என உரக்க கத்திவிட்டு செல்கிறார்.

சுமார் 75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நாடகத்தில், வெளிநாடுகளில் உள்ள அகதிகள் இனப்பாகுபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக அநியாயமாக கொல்ப்பட்டு சாலையில் கிடப்பது, வன்முறையால் கொல்லப்பட்டு வீதியில் கிடக்கும் அகதிகளின் சடலங்கள் உள்ளிட்ட பல காட்சிகளை இந்த நாடகம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த காட்சியை கண்ட உகல பொருளாதார தலைவர்களுக்கு அதிர்ச்சியும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாடகத்திற்கு பின்னர், சுவிட்சர்லாந்து நாட்டு அமெரிக்க தூதரான Suzan G. LeVine என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உலகம் முழுவதும் உள்ள சுமார் 60 மில்லியன் அகதிகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எதிர்க்கொள்ளும் அவமானம், பழி பாதகங்கள், வன்முறை, இனப்பாகுபாடு, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் அகதிகளின் உண்மை வாழ்க்கையை வெளிக்கொண்டு வரவே இந்த நாடகம் நடத்தப்பட்டதாக அந்த செய்தியில் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.