சுபஹ் தொழச் சென்றபோது, விபத்தில் காயமடைந்தவர் இன்று வபாத்
புறகஹதெனிய பகுதியை சேர்ந்த எம். இஸட். எம். சப்ரான் கடந்த 12 ஆம் திகதி கண்டி குருநானல் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தனியார் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று 24-01-2016 மரணமானார்.
கடந்த 12 ஆம் திகதி காலையில் சுபஹ் தொழுகைக்காக தந்தையுடன் பள்ளிவாசலுக்கு மோட்டடார் சைக்கில் செல்லும் போதே கார் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது. தந்தையும் மகனும் காயத்திற்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியாலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். தந்தை சிறு காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவுடன் வீடு திரும்பிவிட்டார். மரணம் அடைந்த சப்ரான் படுகாயமுற்றுள்ளதால் அவரச சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தார். பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 27 ஆகும்.
இவர் பறகஹதெனிய தேசிய பாடசாலை, பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி ஆகியவைகளில் கல்வி பயின்றவர்.
இக்பால் அலி
INNALILAHI VAHINNAELAIHI RAJUHUN
ReplyDeleteMay ALLAH grand jennathu firdows. انا لله وانا اليه راجعون اللهم اغفرله ورحمه وادخله الجنة
ReplyDeletemay alllah give him jannathul firdose
ReplyDelete