"கோப்பி கடே" அபிலிங் காலமானார்
இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள தொலைக்காட்சி தொடாரான 'கோப்பி கடே' எனும் தொடரில் அபிலிங் என்ற நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களை ஏற்று நடித்தவந்த சந்திரஸ்ரீ கொடிதுவக்கு தனது 67 ஆவது வயதில் இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக, வாரந்தோறும் ஒளிபரப்பாகிவந்த “கோப்பி கடே” தொடர் மக்கள் மத்தியில் இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளது.
அதில் இவர் ஏற்று நடித்த 'அபிலிங்' என்ற கதாபாத்திரம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்ததிருந்தது.
மேல்சட்டை அணியாமல், கிராமிய பாணியில் அவர் பேசும் நகைச்சுவை வசனங்கள் சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ் மக்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்டன.
இவரது இழப்புக்கு இலங்கை அரசியல்வாதிகள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பல்துறையினரும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

Post a Comment