Header Ads



"பாலியல் தொழில் நிலையமாகவோ, அல்லது மதுபான சாலையாகவோ இலங்கை மாறிவிடும்"

புத்த பகவான் உயிருடன் இருந்தால், அவரும் சிறை செல்ல நேரிடும் வகையிலான சட்டமூலம் ஒன்றையே அரசாங்கம் கொண்டு வரப் போகிறது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சட்டமூலம் கொண்டு வந்தால் புத்த பகவான் கூட மடத்தில் அல்ல சிறையில் வாழ நேரிடும்.

சட்ட மூலத்திற்கு பிக்குமாரின் ஒழுக்கம் என்ற ஆடையை அணிவித்து பிக்குகள் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சூட்சுமான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்த பகவான் கூட அந்த காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அரசர்களுக்கு ஆலோசனை வழங்கி, நாடுகளுக்கு இடையிலான மோதல்களில் தலையிட்டு அரசியல் செய்தார்.

தாய்லாந்தில் 95 வீதமான பௌத்தர்கள் வாழ்கின்றனர். எனினும் அது ஆசியாவின் பாலியல் தொழில் நிலையமாக மாறியுள்ளது.

இவ்வாறான சட்ட மூலத்தை கொண்டு வருவதன் ஊடாக இலங்கையும் தாய்லாந்தை போல ஆசியாவின் பாலியல் தொழில் நிலையமாகவோ அல்லது மதுபான சாலையாகவோ மாறிவிடும்.

தேரவாத பிக்குகளுக்காக கொண்டு வரப்படும் இந்த சட்டமூலம் ஊடாக தேரவாத பிக்குகள் மகாயான பிக்குகாளாக மாற ஊக்கப்படுவதை காணமுடிகிறது.

பிக்கு சமூகம் என்பது பாரிய அமைப்பு, இதனால், பிக்கு ஒருவர் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டால், அவரை சங்கசானத்தில் இருந்து விலக்கும் அதிகாரம் பிக்குமாருக்கே அன்றி வேறு நபர்களுக்கு இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Neengal uruvaakkiya Aasiyaavin Aacharyam.....ippa ennavaga irukkuthaam....???
    Athodu.... Kolaikkumbalin vathividam, Kollayargalin vathividam.... Pathavi thuspirayogam...ippadi ellataume sollirukkalame....Kamman...!

    ReplyDelete
  2. இதுவரை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிக்குகள் எத்தனை பேருக்கு நீங்கள் கூறும் சட்டம் பாய்ந்துள்ளது.கொலை, கொள்ளை, சூது, மது, மாது, பற்றிப்பேச உங்களுக்கு நா கூசவில்லையா?

    ReplyDelete
  3. அவர்கள் செய்வதெல்லாம் குப்பைதொட்டிக்குல் அடுத்தவர் செய்தால் சட்டப்பெட்டியாம் சாக்கடை அரசியல் வாதிகள் இவர்கள்......

    ReplyDelete
  4. இந்த நாட்டை நாய்வால் உதார்னம் காட்டலாம் இதையாது போடுங்க

    ReplyDelete

Powered by Blogger.