யோசிதவிற்கு விசேட சலுகைகள் கிடையாது, வீட்டிலிருந்து சாப்பாடு போகவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிற்கு விசேட சலுகைகள் எதுவும் சிறைச்சாலையில் வழங்கப்படவில்லை என சிறைச்சாலைகள் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் யோசித ராஜபக்ஸ, நிசாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சாதாரண சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கவிசான் திஸாநாயக்க என்ற சந்தேக நபர் மட்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சந்தேக நபர்களை அனாவசியமாக பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு மூன்று பேர் மட்டுமே சந்தேக நபர்களை பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக எவரும் பார்வையிட விரும்பினால் விசேட அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் தேவையென்றால் மூன்று வேளை உணவையும் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். எனவும் எனினும் எந்தவொரு சந்தேக நபரும் இதுவரையில் அவ்வாறு உணவு கோரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment