ராஜபக்ஸவினருக்கு வஸீம் தாஜுத்தீன், கொலையில் தொடர்பில்லை - நாமல் மீண்டும் மறுப்பு
தமது குடும்பத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கவே வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் திட்டமிட்டு தாம் தொடர்புபடுத்தப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது திட்டமிட்ட சதியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் தொடர்பு பட்டுள்ளதாக பரவலாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் தொடர்பில் கேட்ட போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் காலத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு பிரசாரமே வஸீம் தாஜுதீன் விவகாரமாகும். இனந்தெரியாதவொருவர் அக்கொலை தொடர்பான பொய்யான கட்டுரையொன்றை எழுதி முகப்புத்தகத்தில் வெளியிட்டார்.
அதனை அரசியலாக்கினார்கள். அதனை பயன்படுத்தி முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள்.
அமைச்சரவைப் பேச்சாளர் சி.சி.ரி.வி காணொளியில் முக்கிய நபரொருவரின் மகனை கண்டதாக கூறுகின்றார். வெளிவிவகார அமைச்சர் சர்வதேச சமுகத்திடம் வாகனத்தையும் முக்கிய இளம் பாராளுமன்ற உறுப்பினரையும் கண்டதாக கூறுவதோடு அடுத்த வாரம் கைது செய்யப்படுவாரென்றும் கூறுகின்றார்.
ஆனால் மொறட்டுவ மற்றும் கொழும்பு பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சி.சி.ரி.வியில் யாருமில்லை என்கிறது.ஆகவே இவை அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுக்கள்.
ஏமாற்றும் செயற்பாடுகள். தாஜுதீன் எமது பாடசாலையில் கல்விகற்றவர். எம்மோடு ஒன்றாக விளையாடியவர். அவரை தினமும் கண்டிருக்கின்றேன். மஹிந்த ராஜபக் ஷவுக்கும், நாமல் ராஜபக் ஷவுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கவே இவ்வாறான பொய் பரப்புரைகளை செய்தார்கள்.
நானும் அவரும் ஒரே பாடசாலையில் ஒன்றாக விளையாடியுள்ளோம். ஒரே கழகத்திற்காக விளையாடியிருக்கின்றோம். எமக்கிடையில் எந்தமுரண்பாடுகளும் எழுந்ததில்லை. ஒரே பாடசாலையில் ஒன்றாக விளையாடியுள்ளோம்.
ஒரே கழகத்திற்காக விளையாடியிருக்கின்றோம். எமக்கிடையில் எந்தமுரண்பாடுகளும் எழுந்ததில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Hay lier, your family was trying to bring war between Muslim and Sinhala , don't blame others , you people are 100% responsibility for murder and racist attack in muslin community ,
ReplyDeleteWasim issue is not Muslim singalla issue, you people murderd many many singalish people too, Wasim is your personal mater ,
பலமுயட்சிகலின் பின் சந்தோசமான செய்தி ஒன்ருகாதுக்கு எட்டிவிட்டதுதான் இந்தமகிழ்ச்சியான செய்திக்கும் காரனம்
ReplyDelete