Header Ads



சவூதி அரேபியாவிலிருந்து "சுனாமி' - அமெரிக்கா சொல்கிறது

சகிப்பின்மையை வளர்க்கும் பாகிஸ்தானின் 24,000 மதரஸாக்களுக்கு சவூதி அரேபியாவிலிருந்து "சுனாமி'யைப் போல் பணம் வாரியிறைக்கப்படுவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் மர்ஃபி கூறினார்.

இதுகுறித்து வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை (29) நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பப்படும் பெரும் பணம், வெறுப்பையும், பயங்கரவாதத்தையும் வளர்ப்பதற்காக எவ்வளவு சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு பாகிஸ்தான் மிகச் சிறந்த உதாரணம்.

1956-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 244 மதரஸாக்கள் மட்டுமே இருந்தன.

தற்போது அவை 24,000-ஆக பெருகியுள்ளன.

இந்தப் பள்ளிகளில் வன்முறையோ, அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கொள்கைகளோ சொல்லித் தரப்படுவதில்லை.

ஆனால் அந்த மதரஸாக்களில் இஸ்லாமிய மதம் பயிற்றுவிக்கப்படும் விதம், ஷியா பிரிவினருக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் வெறுப்பை வளர்த்து, மாணவர்கள் பயங்கரவாதத்தின்பால் ஈர்க்கப்படுவதற்கு அடித்தளம் அமைக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள இத்தகைய 24,000 மதரஸாக்களில் பெரும்பாலானவை சவூதி அரேபியாவின் நிதியுதவியில் செயல்படுகின்றன.

நிதி வசதி குறைந்த, மதவாதக் கறை படிந்த நாடுகளால், சவூதி அரேபியா போன்ற நாடுகளின் "சுனாமி' போன்ற நிதியுதவி மூலம் சகிப்பின்மை ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க முடிவதில்லை என்றார் மர்ஃபி.

கடுமையான வஹாபிஸத்தை பரப்புவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள மசூதிகளுக்கு சவூதி அரேபியா கடந்த 1960-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.8 லட்சம் கோடி) நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

7 comments:

  1. வன்முறையோ, பயங்கரவாத கொள்கைகளையோ, கற்றுக்கொடுக்காத மதரசாக்கள்,மசூதிகளிற்கு சவூதி அரசு 10000 கோடி டொலர்களை செலவிட்டுள்ளது அதாவது வருடத்திற்கு 200 கோடி டொலர்கள் என கண்ணீர் வடிக்கும் இதே அமெரிக்கா 2007ஆம் ஆண்டின் பிரிந்துணர்வு ஒப்பந்த்தின் படி நிபந்தனைகளற்ற இராணுவ உதவியாக வருடாந்தம் 300 கோடி டொலர்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது எதிவரும் காலங்களில் இத்தொகையை 500 கோடி டொலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் புதிய குடியேற்றங்களுக்காக வருடாந்தம் மேலும் 50 - 100 கோடி டொலர்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இதுவரை இஸ்ரேலுக்கு 122 பில்லியன் டொலர்கள் அதாவது 12200 கோடி டொலர்களை வழங்கியுள்ளது. இவ்விதம் அமெரிக்க உதவி பெறும் இஸ்ரேல் ஆயுத உற்பத்தி செய்கிறது. இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி 20% இனால் அதிகரித்துள்ளது.
    அதேவேளை சீனாவின் ஆயுத ஏற்றுமதி 162% இனால் அதிகரித்துள்ளது.
    ஆயுத ஏற்றுமதியில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா தனது மொத்த ஆயுத ஏற்றுமதியில் 27% ஐ மத்திய கிழக்கிலும் 45% ஏனைய ஆசிய நாடுகளுக்கும் என தனது மொத்த ஆயுத ஏற்றுமதியில் 72% ஐ ஆசிய கண்டத்தில் விற்பனை செய்கிறது.
    2.ரஷ்யா - 74% (9% மத்திய கிழக்கு + 65% ஏனைய ஆசிய நாடுகள்)
    3.ஜெர்மனி - 31% (ஆசிய நாடுகள்)
    4.பிரான்ஸ் - 54% (ஆசிய நாடுகள்)
    5.சீனா - 74% (ஆசிய நாடுகள்)
    உலகின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 75% மேற்படி முதல் 5 இடத்திலுள்ள நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்துக்கள் -முஸ்லிம்கள்
    பெளத்தர்கள் - முஸ்லிம்கள்
    பெளத்தர்கள் - கிறிஸ்தவர்கள்
    இந்துக்கள் - கிறிஸ்தவர்கள்
    முஸ்லிம் தீவிரவாதிகள்
    இந்துத்துவா தீவிரவாதிகள்
    பெளத்த தீவிரவாதிகள்
    ஜிகாத்
    தாய் மதம்,
    சிங்களே,.......
    சகிப்பின்மை எங்கிருந்து உதிக்கிறது??????
    மசூதியிலா? கோவிலிலா? சர்ச்சிலா? விகாரையிலா?
    யூதர்களின் வாக்களிக்கப்பட்ட பூமி ஆக்கிரமிப்பிலும் ,எண்ணெய்க் கிணறுகளிலும், ஆயுத உற்பத்திச்சாலைகளிலும்.....

    ReplyDelete
  2. Well said... you revealed the hidden truth...

    ReplyDelete
  3. Common man you nailed it bro. May Allah reward you.

    ReplyDelete
  4. இனிய தோழர் abu sarandibi..
    திருக்குறள்;- எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு.
    Albert camus - Always go too far, because that's where you'll find the truth.

    ReplyDelete
  5. You are someone special common man. These are just your comments. but very valuable view. (voicesrilanka also good but not every time)
    you are worth enough to write articles. why don't you?
    Thanks for revealing the hidden truth.
    i want to wish you what is your religion?

    ReplyDelete

Powered by Blogger.