இலங்கையில் பாரியளவில், இணைய குற்றங்கள் அதிகரிப்பு (எச்சரிக்கை)
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது.
இணையங்கள் மூலம் பாலியல் குற்றங்களுக்கு பலர் ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலும் இளவயதினர் மத்தியில் இந்தச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
தொழில் வாய்ப்புகள் என்று கூறி சிறுவர்களை ஏமாற்றுதல் மற்றும் நிர்வாணப் படங்களை பிரசுரித்து பழி வாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளும் செயல்கள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் நட்டாஷா பாலேந்தர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காதலில் தோல்வி கண்ட இளைஞர்கள் தாம் காதலித்த பெண்களை பழி தீர்க்கும் வகையில் செயற்பட்டு இணையக் குற்றங்களில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இந்த இணையக்குற்றங்களை தடுக்க பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள உதவிகளை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment