"ஜனாதிபதிக்காக எவ்வித, உத்தியோகபூர்வ பாடலும் வெளியிடப்படவில்லை"
ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு எவ்வித உத்தியோகபூர்வ பாடலும் வெளியிடப்படவில்லை – ஜனாதிபதியின் செயலாளர்.
ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு எவ்வித உத்தியோகபூர்வ பாடலும் வெளியிடப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் திரு.பீ.பி.அபேகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஒருசில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் Sri Lanka President Official Song – 2016 என வெளியாகும் ”நீர் எங்களுடைய மனிதர்” பாடல் ஜனாதிபதியின் அல்லது ஜனாதிபதி அலுவலகத்தின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Post a Comment