அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பேராளர் மாநாட்டை நடாத்த எந்தத்தடையும் இல்லை - ருஸ்தி ஹபீப்
குருநாகலில் 17 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டை நடாத்துவதில் எந்தத் தடையும் இல்லை என சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலருமான ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் வழங்கிய தகவல்கள் வருமாறு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாப்பானது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. கட்சி சார்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சுப்ரிம் கவுன்சிலுக்கே உண்டு. அத்துடன் கட்சியின் தலைவருக்கு கட்சி மாநாட்டை கூட்டுமாறு உத்தரவிடும் அதிகாரம் உண்டு.
அந்தவகையில் கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன் கட்சியின் போராளர் மாநாட்டை கூட்டுமாறு கட்சித் தவிசாளர் பிரதியமைச்ர் அமீர் அலிக்கு உத்தரவிட்டதற்கு அமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் அல்லது மாநாட்டை கூட்டும் அதிகாரம் இங்கு தவிசாளரினால் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் பணிசெய்ய முன்வராத நிலையில் அல்லது இயங்கா நிலையில் காணப்படுகிற நிலையில் தவிசாளர் அந்த அதிகாங்களை பெறுவதற்கு தகுதியுடைவராகிறார். எனவேதான் இங்கு அமீர் அலி கட்சியின் போராளர் மாநாட்டை தலைமைதாங்கி நடாத்தவுள்ளார்.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாப்பில் சில தவறுகள், பிழைகள் காணப்படுகிறது. சிலருக்கு கட்சி யாப்பானது மீயுயர் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இவற்றையும் இந்த போராளர் மாநாடு கருத்தில் கொள்ளவுள்ளது.
இதுவொரு முக்கியமான காலகட்டம். அரசியலமைப்பு சீர் திருத்தம், உள்ளுராட்சித் சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள கூடுகிறது. இதன்போது புதிய செயலாளர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம்.
அத்துடன் இங்கு ஞாபகம் கொள்ளத்தக்க அம்சம் யாதெனில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாப்பை ஒரு தனிநபர் வரைந்தார் என்தற்காக, அது தனிநபருக்குரிய யாப்பு அல்ல. அது கட்சியின் யாப்பு. கட்சிக்கு எது அவசியமென கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். 2 தனிநபர்கள் அல்ல.
கட்சியானது சில யாப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போராளர் மாநாடுகள் கூட்டப்படுவதின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாககூட இது விளங்குகிறது. கட்சி தற்போது சில யாப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிராக சிலர் நீதிமன்றத்தை நாடலாம். அல்லது நாடாமல் விடலாம். நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையாளருக்கோ கட்சியின் யாப்பை தீர்மானிக்க முடியாது. கட்சி பேராளர் மாநாடானது யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை கொண்டுள்ளது எனவும் ருஸ்தி ஹபீப் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.
Here we must find the reasons about why the secretary does not agree to this conference? If the secretary does not agree, how the chairman can take his role? Who can permit?
ReplyDeleteஅப்படியா? சரி சார்
ReplyDelete