Header Ads



மாடறுப்பு தடைசெய்யப்பட்டால், பெரிதும் பாதிக்கப்படுவது சிங்களவர்களே - ரவூப் ஹக்கீம்

நாட்டில் மாடறுப்பது தடை செய்யப்படுவதற்கு முன்பு நாடெங்கிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும். மசுபானசாலைகளுக்கும் சூதாட்ட நிலையங்களுக்குமான அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டில் மாடறுப்பதை தடைசெய்வதற்கு முன்பு மதுபானசாலைகளும் சூதாட்ட நிலையங்களும் மூடப்பட வேண்டுமென்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மாத்திரம் ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்காது தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடாத்த வேண்டுமெனவும்; அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் இன்று மாடறுப்பது தடைசெய்ய வேண்டும் என்று புதிய புரளியொன்று நாட்டில் உருவாகிவிட்டது. இந்த புதிய புரளியில் முஸ்லிம்கள் தம்மை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

மாடறுப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகும். முஸ்லிம்கள் இந்த இறைச்சி வர்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும் பாவனையாளர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே. முஸ்லிம்கள் நாம் நாட்டின் சனத்தொகையில் 10 வீதமே இருக்கிறோம்.

மாடறுப்பது தடைவிதிக்கப்படுவதால் முஸ்லிம்களின் சமயக்கடமைகள் சவாலுக்குள்ளாகின்றன என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும்.

அதே வேளை இதனை விட நாட்டிலுள்ள மதுபான சாலைகளினதும் சூதாட்ட நிலையங்களினாலும் ஏற்பட்டடு வருகின்ற சமூக சீரழிவுகளையும் அதன் விளைவுகளையும் ஜனாதிபதிக்கு விளக்க வேண்டும்.
இதற்கென சமூக நலனில் ஆர்வமுள்ள நாட்டுப்பற்றுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளையும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நல்ல நியாயங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

8 comments:

  1. Great Escape......................

    ReplyDelete
  2. நமது வேண்டுகோலும் இதுவே.....முதலில் அதை செய்யுங்கள் தொடர்ந்து இதையும் நிரைவேற்றலாம்..

    ReplyDelete
  3. Dear minister? Who does This? Who is leading this to the president. You are the leader of slmc . so you must take the leadership. You come foreword and request the the other Muslim parliamentarians to join with you. Then ishah Allah , it will be success.

    ReplyDelete
  4. Dear minister? Who does This? Who is leading this to the president. You are the leader of slmc . so you must take the leadership. You come foreword and request the the other Muslim parliamentarians to join with you. Then ishah Allah , it will be success.

    ReplyDelete
  5. சாமர்த்தியமான அழுத்தம். இனி மாட்டிறைச்சித் தடை கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படும்

    ReplyDelete
  6. Mazu paanaththa vittaal eppadi , bikkugal valvey suththa
    sooniyamaip poyvidum !

    ReplyDelete
  7. இது இவர் JM இற்கு அளித்த பேட்டி என்றால் ஒரு பிரயோசனமில்லை. இதையே இவர் main Sinhala, English media களில் கூறியிருந்தால் அது மிகவும் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  8. ஒரு சக்தி வாய்ந்த முஸ்லிம் கட்சியின் தலைவர், சட்டம் படித்தவர் எப்படி கணக்குப் போடுகிறார் என்று பாருங்கள்.

    1. மாடறுத்தோ, ஆடறுத்தோ, ஒட்டகம் அறுத்தோ ( ஆகுமாக்கப்பட்ட மிருகம்) கொர்பான், உஹில்யா கொடுப்பது முஸ்லிம்களின் உரிமை, அந்த உரிமையை.... சாராயம், சூதாட்டம் ( உண்மையான முஸ்லிம் இந்த விடயத்தில் ஈடுபடுவதில்லை என்பது வேறுவிடயம், சென்ற அரசாங்கத்தில் இந்த மசோதாவுக்கு மௌனம் சாதித்து இதுக்கு ஆதரவளித்த மாபெரும் முஸ்லிம் தலைவரும்... முதுகெலும்பில்லாத அந்த அரசோடு இருந்த அமைச்சர்களும் எம்பிமாரும். ரிசாத் படுர்டீனும் உட்பட. ஜேவிபி இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது கடும் கண்டனமும் தெரிவித்தது. இஸ்லாம் மதம் தடை செய்துள்ள விடயத்துக்கு, நீங்கள் தான் முதலில் எதிர்க்க வேண்டியவர்கள் என்று கூறியது ) போன்றவைகளுக்கு தடை விதித்தால், முஸ்லிம்களின் மதகடமையை விட்டுக் கொடுக்க தயாராகும் தலைமைத்துவம். புத்த மதத்தில் எல்லா உயிர்களும் கொல்லப்படுவதை எதிர்கிறது. ஆக (மாடோ, ஆடோ, ஒட்டகமோ ) மிருகம் அறுக்கப்படுவதை தடைசெய்யத்தான் பரிந்துரைப்பார்கள். ஆக இது ( மதகடமைகளுக்கு சவால்... என்ற வார்த்தை பிரயோகம் முஸ்லிம்களின் உரிமையை மலினப்படுத்தி உள்ளது.) முஸ்லிம்களின்,.... தனிமனிதனின்.. உரிமை மறுப்பு.

    2. இந்த நாட்டின் ஜனாதிபதி கூறிய விடயத்தை... புரளி என்றும்... முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றும்.... சொல்வது அதுவும் ஒரு முஸ்லிம்களின் உரிமைக்காக போராட உருவாக்கப்பட்ட கட்சியின் தலைமை கூறுவதென்பது, தலைமைத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

    3. வீதம் போட்டு கணக்கு கூறும் தலைமை.... பாதிக்கப்படுவோரின் வீதக் கணக்குப் போட அதன் சிந்தனைக்கு முடியவில்லை.

    4. சமூக சீர்கேடுகளையும், விளைவுகளையும் பற்றி ஜனாதிபதிக்கு ( My3... சுகாதார மந்திரியாக இருக்கும் போது உலக சுகாதார நிறுவனத்தினால் பாராட்டப்பட்டவர்) "விளக்க" வேண்டும் என்று சொல்வதென்பது மிகவும் வெகுளித்தனமானது....

    5. சமூக நலனில் ஆர்வம் உள்ள தமிழ் சிங்களஅரசியல் வாதிகளையும் "முஸ்லிம் தலைவர்கள்" (யார் அந்த முஸ்லிம் தலைவர்கள் ) இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால்.... அப்போ நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்??????

    6. நல்ல விடயங்களுக்கு உறுதினையாக இருப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை. முஸ்லிம்களின் மறுக்கப்படும் உரிமையை போராடி வென்றேடுப்பதட்கே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது என்பதை உங்களுக்கும் அதில் உள்ள சுயநலக் கும்பல்களுக்கும் ஞாபகபடுத்த விரும்புகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.