Header Ads



ஜேர்மனியை விட்டு வெளியேறும், முஸ்லிம்களின் கசப்பான அனுபவங்கள்..!

ஐரோப்பிய நாடுகளிலேயே புகலிடத்திற்கு சிறந்த நாடாக ஜேர்மனியை பெரும்பாலானவர்கள் குறிப்பிடும் நிலையில், சில அகதிகள் ஜேர்மனியின் உண்மையான மறுபக்கத்தை விளக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், இலங்கை, சிரியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு யுத்தங்களை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு ஐரோப்பிய நாட்டில் குடியேற அகதிகள் எண்ணினால் அவர்களது நினைவில் வரும் முதன்மையான நாடு ஜேர்மனி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த எண்ணத்தில் தான் நாள்தோறும் அகதிகள் படையெடுத்து தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் ஜேர்மனியில் நுழைந்துள்ளனர்.

எனினும், இங்குள்ள சில புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் மனநிலை ’எப்போது நாம் தாய்நாடுகளுக்கு திரும்பி, மகிழ்ச்சியான வாழ்க்கியை நடத்த போகிறோம்’ என ஏங்கிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உதாரணத்திற்கு, சிரியா நாட்டை சேர்ந்த அமீர்(30) என்ற புலம்பெயர்ந்தவர் ஜேர்மனியில் தன்னுடைய சொந்த அனுபங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

’அகதிகளின் சொர்க்க பூமி ஜேர்மனி நாடு என பல பேர் கூறிவந்தனர். இதனை உண்மை என நம்பி சிரியாவில் இருந்த தனது அத்தனை சொத்துக்களையும் விற்றுவிட்டு சுமார் 15,000 யூரோ செலவிட்டு எனது மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மனிக்கு அழைத்து வந்தேன்.

பல வளமான எதிர்ப்பார்ப்புகள், பிரகாசமான வாழ்க்கை முறைகள் கனவுகளுடன் ஜேர்மனிக்குள் நுழைந்த நாள் அன்றே அத்தனையும் தகர்ந்து விட்டது.

சொந்தமாக ஒரு தொழிலை அமைத்துக்கொள்ள சிறிய அளவிலான வீடாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஒரு பழமையான கட்டடத்தில் எந்த வசதியும் இல்லாத குறுகிய அறையில் தங்க வைத்துள்ளார்கள்.

சரி, நல்ல வேலையில் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை மாற்றலாம் என எண்ணினால், இங்கு வேலை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

ஜேர்மனி நாட்டிற்கு வருவதற்கு முன்னதாக இங்குள்ள அகதிகள் ஒவ்வொருவருக்கும் அரசு மாதந்தோறும் 500 யூரோ நிதியுதவி செய்வதாக அறிந்தேன்.

ஆனால், சிரியாவின் விலைவாசியை ஒப்பிடுகையில், ஜேர்மனியில் அனைத்து பொருட்களும் கைக்கு எட்டாத விலையிலேயே இருக்கிறது.

ஜேர்மனியில் உள்ள வாழ்வியல் முறைக்கு மாறவும், விலைவாசியை எதிர்க்கொண்டு நல்ல தரமான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள குறைந்தது 10 வருடங்களாவது தேவைப்படும். ஆனால், எனக்கு இது நிச்சயமாக சாத்தியம் இல்லை.

எனக்கு மட்டுமல்ல, இங்குள்ள பல அதிகளின் மனநிலையும் இவ்வாறு தான் உள்ளது.

சிரியாவில் இருந்து புறப்படும்போது என்னிடம் இருந்த 15,000 யூரோவையும் செலவிட்டுவிட்டேன்.

ஆனால், இப்போது தாய்நாட்டிற்கு திரும்ப தேவையான பணம் இல்லாமல் தவித்து வருகிறேன்’’ என அமீர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சிரியாவை சேர்ந்த மற்றொரு அகதியான அப்துல்லா(51) என்பவர் ஐ.நா சபையின் உதவியுடன் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள 10 மாதங்களுக்கு முன்னர் தனது 10 குழந்தைகளுடன் ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

ஆனால், இப்போது அவசரமாக புதிய கடவுச்சீட்டை ஏற்பாடு செய்துக்கொண்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இது குறித்து அப்துல்லா கூறியபோது, ‘இந்த பொது இடங்களில் கூட இளம்பெண்கள் ஆண்களை உதட்டோடு உதட்டாக முத்தமிட்டு கொள்கின்றனர்.

இதுபோன்ற ஒரு சுற்றுச்சூழலில் எனது மகள்களை வளர்க்க முடியாது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை வேறு. சிரியாவில் உள்ள வாழ்க்கை முறை வேறு. தாய்நாட்டிற்கு திரும்புவதே சிறந்தது’ என கூறியுள்ளார்.

ஜேர்மனியை விட்டு சொந்த விருப்பதுடன் வெளியேறும் அகதிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் Hannelore Thoelldte என்பவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

‘பல யுத்தங்களை சந்தித்துவிட்டு பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் இங்கு வரும் அகதிகளில் சிலரின் கனவு நனவாகாதபோது அவர்கள் நாட்டை விட்டு வெளியே முயற்சிப்பது உண்மை தான்.

2014ம் ஆண்டு புகலிடம் கோரி ஜேர்மனிக்கு வந்த புலம்பெயர்ந்தவர்களில் 13,574 பேர் நாட்டை விட்டு அவர்களது விருப்பத்தின் பேரில் வெளியேறி விட்டனர்.

கூடுதல் அதிர்ச்சியாக, நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளின் இந்த எண்ணிக்கையானது 2015ம் ஆண்டு 37,220 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.