Header Ads



நவாஷ் ஷெரீப் வழங்கிய அன்பளிப்பு, வர்த்தகர்களின் பிடியிலிருந்து கண்டி ஜீன்னா மண்டபம் விடுபடுமா..?

-ஜஹங்கீர்-

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தனது ஸ்ரீலங்கா விஜயத்தை வெற்றிகரமான முடித்துக் கொண்டு சற்று முன்னர் நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார். அவர் இலங்கையுடன் பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதுடன், இங்கு இருக்கின்ற நேரத்தில் இந்தியப் பிரதமர் மோடியுடன் சில விவகாரங்கள் தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடியும் இருக்கின்றார்.

கண்டியில் அமைந்துள்ள ஜீன்னா ஞாபகார்த்த மண்டபத்திற்குப் போன ஷெரீப் அதன் அபிவிருத்திக்காக 100000 இலட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கி இருக்கின்றார். 

இந்த ஜீன்னா ஞாபகார்த்த மண்டபத்தை இப்போது அந்தப் பெயரில் அழைப்பதை விட வர்தகர்களின் மண்டபம் என்று அழைப்பதுதான் பொறுத்தம் என நாம் கருதுகின்றறோம். நாம் ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றோம் என்றால் மண்டபம் முற்று முழுதாக வர்த்தகர்களின் பிடியில் சிக்கி இருக்கின்றது. 

அது மட்டுமல்லாமல் ஜின்னாவின் பெயரை விட வர்த்தகர் சங்கம் என்ற பெயரைக் கனதியாக (பெரிய எழுத்தில்) போட்டு அங்கு ஜின்னாவின் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருப்தை அந்த வழியால் போகின்றவர்கள் அவதானிக்க முடியும். எனவே ஜின்னா மண்டபத்தில் ஜின்னாவைக் காணவில்லை!

இது பற்றி பாகிஸ்தான் அரசும் கண்டி மாவட்ட  முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டி இருக்கும் என்பது எமது கருத்து. எனவே பாகிஸ்தான் தலைவர் கண்டி வர்த்தகர் சங்கக் கூட்டத்துக்குப் போனாரா ஜன்னா ஞாபகார்த்த மண்டபத்துக்குப் போனாரா என்பது குழப்பமாக இருக்கின்றது!

No comments

Powered by Blogger.