சிங்கள ரத்தம் குறித்து, அமைச்சரவையில் பேசிய மங்கள சமரவீர
சிங்க லே (சிங்கள ரத்தம்) அமைப்பு குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது.
நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையின் கவனத்திற் கொண்டுவந்துள்ளார்.
இந்த அமைப்பு இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடக் கூடுமென வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்க லே அமைப்பு முகப் புத்தகம் உள்ளிட்ட சமூக வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதன்படி குறித்த அமைப்பு ஏதேனும் மோதலுடன் தொடர்புபட்டால் அது இனப் பிரச்சினையாக வெடிக்கக் கூடிய அபாயம் உண்டு.
எனவே, இந்த அமைப்பின் பின்னணியில் செயற்படுவோர் குறித்து ஆராய வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து குறித்து ஆராய்வது என அமைச்சரவையில் இணங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிங்க லே அமைப்பு ஓர் அடிப்படைவாத அமைப்பு கிடையாது என அந்த அமைப்பு நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளது.
If they not terrorists group then why they painted on the walls of Muslims's houses...?
ReplyDelete