Header Ads



ஞானசாராவுக்கு விளக்கமறியல், கலகம் செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

கலகொடஹெத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட தரப்பினரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த நபர்களை கைது செய்வதற்காக காணொளி காட்சிகளை உபயோகிக்குமாறு நீதிமன்றம் காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.