Header Ads



அக்கரைப்பற்று அபுசாலி சேர், வாகன விபத்தில் உயிரிழந்தார்

அக்கரைப்பற்று அபுசாலி சேர் நேற்று இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கொழும்பு செல்லும் வழியில் கடவத்தையில் இவரின் மோட்டர் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அன்னாருடைய அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தை அருள வேண்டும்.

இவர் அக்கரைப்பற்றினுடைய எல்லைப்புற கிராமமான முல்லைத்தீவிலே உள்ள பாடசாலையில் சுமார் ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் கல்வி கற்ப்பித்திருக்கிறதாக எனக்கு நினைவு இருக்கிறது.

ஓர் நாள் முல்லைத்தீவு கட்டில் சேரை சந்தித்த போது பாடசாலைக்கு ஆசிரியர்கள் எடுத்துச் செல்லும் பையை விட மேலதிகமாக ஒரு பை இருந்தது சேர் இதிலென்ன இருக்கிறது எனக் கேட்டேன் திறந்து காட்டினார்,

அதிலே மாணவர்கள் பல் துலக்கி, குளித்து துப்பரவாகி வரக்கூடிய பொருட்கள் அனைத்துமிருந்தன.

ஏன் சேர் இவையல்லாம் என்று கேட்டதற்க்கு இந்த பின் தங்கிய மாணவர்களை நானே சென்று வீடுகளுக்கு பல் துலக்குவதிலிருந்து பாடசாலை அழைத்து வருவது இதிலே எவருக்கும் அக்கறையில்லை என்றும் கூறுவார், எவ்வளவு நேர்த்தியான பணி இவரது சேவை , மனம் மிகவும் விசாலமானது.

இதே போல் எங்களது சாதரண பரிட்சை நேரத்தில் சமுகக்கல்வி, விவசாயம் ஆகிய பாடங்கள் நடை பெறும் வேளைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவரது வீட்டிலே சுமார் பத்து மாணவர்களை அழைத்து சென்று மீட்டல் செய்தார், மறக்கவே முடியாது.

இறைவன் அவருக்கு நல்லருள் புரிந்து மறுமை வாழ்வை சிறப்பாக்க பிராத்திப்போம்.


-அஸ்மி அப்துல் கபூர் - அக்கரைப்பற்று

3 comments:

Powered by Blogger.