திலகரத்ன டில்சான் இலங்கை, ரசிகரை திட்டியது சரியா..? (வீடியோ)
இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான டுவெண்டி டுவெண்டி (20:20) கிரிக்கட் தொடரின் பின்னர் திலகரத்ன டில்சான் ரசிகர் ஒருவரைத் திட்டிய விடயம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
போட்டி முடிவின் பின்னர் மைதானத்திலிருந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் திலகரத்ன டில்சானைப் பார்த்து கமெண்ட் (கிண்டல்) அடித்துள்ளார்.
குறித்த ரசிகர் டில்சானை அழைத்து ”டில்சான் உங்களுக்கு வயதாகி விட்டது. நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இது” என்று தெரிவித்துள்ளார்.
இது திலக்கரத்ன டில்சானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து குறித்த ரசிகரை ஆத்திரத்துடன் முறைத்த திலகரத்ன டில்சான், ”அப்போ நீ வந்து துடுப்பெடுத்தாடப் போகின்றாயா?” என்று கடுமையான வார்த்தைகளை கொட்டியுள்ளார்.
அத்துடன் மைதான பாதுகாவலர்களிடமும் குறித்த ரசிகர் தொடர்பில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். வீடியோ
"அப்போ நீ வந்து துடுப்பெடுத்தாடப் போகின்றாயா?” என்பது கடுமையான வார்த்தை தான். ஆனால் அவர் நளினமான முறையில் "அப்போ நீங்கள் வந்து விளையாடவா? ஐயோ சும்மா போறும்" என்று தான் கூறினார். அவர் கூறிய விதம் கடுமையானதோ அல்லது திட்டலோ அல்ல. சிங்களத்தில் இப்படித்தான் கூறினார்,"ඔයා ඇවිල්ල ගහන්ඩද? අනේ යන්න නිකං" தாங்கள் கடுமையான வர்ணனையை தலைப்பில் இட்டு விட்டீர்கள்.
ReplyDeleteThat spectator had drunk during this conversation. It is not mentioned in your article. Also He is not suppose to ask such questions from a Class one player of the National Team. It will badly affected the morale of the player.
ReplyDelete