Header Ads



என் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்கமுடியாது - நீதிபதி

எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை கோரி மனுவொன்று இன்று (28) சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் போதிய விளக்கங்கள் இன்றி பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிபதி ரங்க திசாநாயக்க அதனை நிராகரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நீதிபதி, எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் நான் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் செய்ய மாட்டேன். அதனால் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது.

நான் தவறு செய்திருந்தால் மேலதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஏனெனில் நான் தவறு செய்யவில்லை. பிணை வழங்க போதுமான விடயங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்படவில்லை.

அத்துடன் இந்த வழக்கை நான் தொடர்ந்தும் விசாரிக்க விரும்பவில்லை. இது குறித்து சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளேன். பெரும்பாலும் அடுத்த வழக்குத் தவணைக்கு வேறொரு நீதிபதியே இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் நீதிபதி ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்

10 comments:

  1. சபாஷ்! இவ்வாறு ஒரு நீதிபதியினால் துணிச்சலாக பேசமுடிவதே போதும். நாமெல்லாம் ஏதோ சிறிதளவாவது அரும்பிக்கொண்டிருக்கும் நல்லாட்சியில் இருக்கின்றோம் என்பது நினைவுக்கு வருகின்றது.

    ReplyDelete
  2. என்னத்த சொல்ர இந்த புன்னியவானிற்க்கு, அசத்தலான & அருமையான பதிலடி, மெய்சிலிற்க்கும் போல் உள்ளது, எம் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக ஒரு சலூட்டே அடிக்கிறேன் சார் நான் உமக்கு..!

    ReplyDelete
  3. இந்த நீதிபதிதான் உண்மையான நீதிபதி கடந்த தேர்தலில் தேர்தல்கள் ஆணையார் அவர்களிடம் இருந்த தைரியம் இந்த நீதிபதியிஒடமும் உண்டு இது போன்ற ஆயிரக்கணக்கான அதிகாரிகள் நம் நாட்டில் இல்லை மறை காயாக உள்ளனர் காலாம் வரும்போது எல்லோரும் வெளி வந்து அவர்களின் திறமைகளை காட்ட வேண்டும்

    ReplyDelete
  4. நீதித் துறைக்கு உயிர் ஊட்டிய மாபெரும் நெஞ்சுரமுள்ள வீரன். இவருக்கான பாதுகாப்பும் உற்சாகமும் அரசாங்கத்தினாலும் மக்களினாலும் வழங்கப்பட வேண்டும். நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த அரசாங்கத்தையும் ரணிலையும் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  5. நீதித் துறைக்கு உயிர் ஊட்டிய மாபெரும் நெஞ்சுரமுள்ள வீரன். இவருக்கான பாதுகாப்பும் உற்சாகமும் அரசாங்கத்தினாலும் மக்களினாலும் வழங்கப்பட வேண்டும். நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த அரசாங்கத்தையும் ரணிலையும் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  6. இந்த நீதிபதிதான் உண்மையான நீதிபதி கடந்த தேர்தலில் தேர்தல்கள் ஆணையார் அவர்களிடம் இருந்த தைரியம் இந்த நீதிபதியிஒடமும் உண்டு இது போன்ற ஆயிரக்கணக்கான அதிகாரிகள் நம் நாட்டில் இல்லை மறை காயாக உள்ளனர் காலாம் வரும்போது எல்லோரும் வெளி வந்து அவர்களின் திறமைகளை காட்ட வேண்டும்

    ReplyDelete
  7. விரைவில் நீதிபதி இடமாற்றபடுவார். ஏற்கனவே எக்னலிகொட வழக்கில் உறுதியாக செயற்பட்ட அரசதரப்பு வக்கீல் தேரர் கைதாகிய உடனே மாற்றப்பட்டு விட்டார். புரிகிறதா தேரரின் வல்லமை?

    ReplyDelete

Powered by Blogger.