பீக்கொக் மாளிகையில் தங்கம் பிடிபட்டதாக, இதுவரை தகவல் இல்லை (படங்கள்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கொழும்பு இராஜகிரியவிலுள்ள பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மணலை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு மணலை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நீச்சல் தடாகம் குறிப்பிடத்தக்களவு ஆழம் என்பதனால் அதிலுள்ள மணலை அகற்றுவதற்கு பல மணித்தியாலங்கள் எடுக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் பிரபல வர்தகரான லியானகேவின் குறித்த இல்லத்தில் தங்குவதற்கு மஹிந்த தீர்மானித்து யோதிடர்களின் யோசனைக்கமைய வீட்டுக்கு முன்னாலிருந்த நீச்சல் தடாகத்தை மணல் கொண்டு நிரப்பியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவரால் உள்ளே தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து. அதன் உரிமையாளரினால் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய தற்போது அதனை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு தங்கம் இருப்பது சந்தேமே. நல்லாட்சி அரசின் முகத்தில் கரி பூசுவதற்காக கிளப்பப்ட்ட புரளியாகத்தான் இது இருக்கும்.பொருத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete